காப்பிக்கடை, உணவங்காடி, போக்குவரத்து நிலையங்கள் போன்ற இடங்களில் உள்ள பொதுக்கழிவறைகள் சுத்தமாக வைக்கப்படுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அண்மைய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. தேசிய சுற்றுச்சூழல் முகவை நேற்று இதனைத் தெரிவித்தது.
ஒன்பது வகையான கட்டடங்களில் உள்ள பொதுக் கழிவறைகள் ஆய்வுசெய்யப்பட்டதாக அந்த முகவை தெரிவித்தது. இந்த ஆய்வின் முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
தேசிய சுற்றுச்சூழல் முகவை மற்றும் பொது சுகாதாரக் கழகம் இந்த ஆண்டு சுத்தமான பொது கழிவறை இயக்கத்தை நேற்று தொடங்கியது. அப்போது இந்த ஆய்வு குறித்த முடிவுகள் வெளியிடப்பட்டன.

