புதிய அறிவியல் நிலையம் திறக்கப்படுவதில் தாமதம்

ஜூரோங் லேக் வட்­டா­ரத்­தில் அமை­ய­வுள்ள புதிய அறி­வி­யல் நிலைய வளா­கம், எதிர்­பார்க்­கப்­பட்­ட­தை­விட இரண்டு ஆண்­டு­கள் தாம­த­மாக, வரும் 2027ஆம் ஆண்­டில் கட்டி முடிக்­கப்­படும்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால் ஏற்­பட்ட தடை­களும் தாம­த­மும் அதற்­குக் கார­ணங்­க­ளா­ளும்.

கட்­ட­டம் அள­வுக்கு அதி­க செல­வில்­லா­மல் இருப்­பதை உறு­தி­செய்­யும் பொறி­யி­யல் ஆய்­வு­களை நடத்த கூடு­தல் காலம் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­தாக அறி­வி­யல் நிலை­ய­மும் கல்வி அமைச்­சும் நேற்று கூறின.

புதிய கட்­ட­டம் நிறை­வு­பெ­றும் வரை, ஜூரோங் ஈஸ்­டில் அமைந்­துள்ள தற்­போ­தைய கட்­ட­டம் தொடர்ந்து பொது­மக்­க­ளுக்­குத் திறந்­தி­ருக்­கும் என்று அறி­வி­யல் நிலை­யத்­தின் தலைமை நிர்­வாகி லிம் டிட் மெங் கூறி­னார்.

கட்­டு­மா­னச் செல­வு­களில் கவ­னம் செலுத்த அறி­வி­யல் நிலை­யம் உறு­தி­கொண்­டி­ருப்­ப­தா­க­வும் அது நீடித்த நிலைத்­தன்மைமிக்­க கட்­ட­டத்­துக்கான நல்­லு­தா­ர­ண­மாக விளங்க தாங்­கள் திட்­ட­மி­டு­வ­தா­க­வும் இணைப் பேரா­சி­ரி­யர் லிம் குறிப்­பிட்­டார்.

புதிய அறி­வி­யல் நிலை­யக் கட்­ட­டம் சைனீஸ் கார்­டன் எம்­ஆர்டி நிலை­யத்­துக்கு அரு­கில் அமைந்­தி­ருக்­கும். அடுத்த 20 முதல் 30 ஆண்­டு­க­ளுக்­குள் ஜூரோங் லேக் வட்­டா­ரத்தை மேம்­ப­டுத்­தும் திட்­டத்­தின் பகு­தி­யாக நிலை­யம் அங்கு கட்­டப்­படும்.

புதிய நிலை­யத்­தில் ஒன்­றோடு ஒன்று பின்­னி­யி­ருக்­கும் ஐந்து நீள் சது­ரக் கட்­ட­டங்­கள் இருக்­கும்.

அதன் பெரிய கண்­ணாடி சன்­னல்­க­ளி­லி­ருந்து வரு­கை­யா­ளர்­கள் ஏரி­யைப் பார்க்க முடி­யும்.

அரு­கில் உள்ள பூங்கா, ஏரி ஆகி­ய­வற்­றுக்கு மேலே மிதப்­பது போன்று காட்­சி­ய­ளிக்­கும் வகை­யில் வளா­கம் வடி­வ­மைக்­கப்­படும் என்று கல்வி அமைச்சு கூறி­யது.

உல­கப் புகழ்­பெற்ற ஸாஹா ஹடிட் கட்­டட வடி­வ­மைப்பு நிறு­வ­ன­மும் ஆர்க்­கி­டெக்ட்ஸ் 61 எனும் உள்­ளூர் நிறு­வ­ன­மும் இணைந்து கட்­ட­டத்தை வடி­வ­மைத்­துள்­ளன.

புதிய நிலை­யத்­தில் கோள­ரங்­க­மும் திறந்த வெளி­களும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

பொது­மக்­கள் இயற்­கையை எளி­தில் சென்­ற­டை­ய­வும் அங்கு வசதி­ கள் இருக்­கும்.

அறி­வி­யல் நிலை­யத்­தில் நேற்று 'அன்­டேம் ஆஃப்டர் டார்க்' நிகழ்ச்­சி­யைத் தொடங்கி வைத்து பேசிய கல்வி அமைச்­சர் சான் சுன் சிங், அறி­வில் கல்­விக்கு மதிப்­புக்­கூட்ட புதிய கட்­ட­டம் முய­லும் என்­றும் சமூக நிகழ்ச்­சி­களை அது ஏற்று நடத்­தும் என்­றும் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!