துணைப்பாட வகுப்புகளில் சிடிஏசி உதவி

1 mins read
5fbe3349-69a7-4e71-9b0a-e0c98c716ccd
-

சிடிஏசி எனப்படும் சீனர் மேம்பாட்டு உதவி மன்றம், அடுத்த ஆண்டில் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த அதிகமான மாணவர்களுக்குக் குறைந்த கட்டணத் துணைப்பாட வகுப்புகளைத் திட்டமிடுகிறது.

$2,400 முதல் $4,800 வரை மாத வருவாய் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கட்டணக் கழிவு கிடைக்கும்.

இவர்கள் ஒரே முறைக் கட்டணமாக $10 மட்டும் செலுத்த வேண்டியிருக்கும் என்று சிடிஏசி கூறியது.

துணைப்பாட வகுப்புகளில் இரண்டு, மூன்று மாணவர்கள் மட்டும் படிப்பார்கள்.