காட்டுக்கு கீழே ரயில் பாதை அமைக்க $758 மி. குத்தகை குறுக்குத் தீவு வழித்தட இரண்டாம் கட்டப் பணிகள் 2023 முதல் பாதியில் தொடங்கும்

காட்டுக்கு கீழே ரயில் பாதை அமைக்க $758 மி. குத்தகை குறுக்குத் தீவு வழித்தட இரண்டாம் கட்டப் பணிகள் 2023 முதல் பாதியில் தொடங்கும்

06 Dec 2022 - 5:30 am

2 mins read

குறுக்­குத் தீவு எம்­ஆர்டி வழித்­தடத்­தின் இரண்­டாம் கட்­டத்­திற்­காக 5கி.மீ. சுரங்­கப்­பாதை கட்­டப்­படுகிறது. அந்­தப் பாதையை வடி­வமைத்து கட்­டு­வ­தற்­காக $758 மில்­லி­யன் குத்­த­கையை நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் வழங்கி இருக்­கிறது.

அந்த 5 கி.மீ. சுரங்­கப்­பா­தை யில் 2 கி.மீ. பகுதி மத்­திய நீர்த்­தேக்க காட்­டுப் பகு­திக்­குக் கீழே செல்­லும்.

குறுக்­குத் தீவு எம்­ஆர்டி வழித்­தடத்­தின் பொங்­கோல் நீட்­டிப்பு திட்­டத்­தின்­கீழ் பொங்­கோல் ரயில் முனை­யத்­தைக் கட்­டு­வ­தற்­காக $496 மில்­லி­யன் மதிப்­புள்ள வேறொரு குத்­த­கை­யை­யும் ஆணை­யம் வழங்கி இருக்­கிறது.

இந்த இரண்டு திட்­டங்­க­ளுக்­கான கட்­டு­மா­னப் பணி­கள் 2023 முதல் பாதி­யில் தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அந்த வழித்­த­டத்­தில் பய­ணி­கள் போக்­கு­வ­ரத்து 2032ஆம் ஆண்டு தொடங்­கும் என்று ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

'ஒப­யாஷி கார்ப்­ப­ரே­ஷன்' என்ற நிறு­வ­னத்­திற்­கும் 'ஷாங்­காய் டன்னல் இன்­ஜி­னி­ய­ரிங் கம்­பெனி (சிங்­கப்­பூர்)' நிறு­வ­னத்­திற்­கும் இடைப்­பட்ட ஒரு கூட்டு நிறு­வ­னம் ஃபேர்வேஸ் டிரை­வில் இருந்து ஷின் மிங் வாக் வரை நீளும் அந்த 5 கி.மீ. சுரங்­கப்­பா­தை­யைக் கட்டும்.

அந்­தப் பாதையைத் தோண்­டு­வதற்குப் பெரிய சுரங்­கம் தோண்டும் இயந்­தி­ரம் பயன்­ப­டுத்­தப்­படும். அந்த இயந்­தி­ரத்­தின் விட்­டம் கிட்­டத்­தட்ட 12 மீட்­டர் இருக்­கும்.

அந்­தப் பாதை பூமி மட்­டத்­தில் இருந்து 70 மீட்­டர் கீழே அமை­யும். பொது­வாக சுரங்­கப்­பாதை 20 முதல் 30 மீட்­டர் ஆழத்­தில்தான் இருக்­கும். அந்­தத் திட்­டத்­தின் மூலம் ஏற்­ப­டக்­கூ­டிய சுற்­றுச்­சூ­ழல் பாதிப்பு­ க­ளைத் தவிர்த்­துக்கொள்ளும் வகை­யில் அனைத்து நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­படும் என்று ஆணை­யம் தெரி­வித்­தது.

கட்­டு­மா­னப் பணி­க­ளால் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­கும் வாகன ஓட்டு­நர்­க­ளுக்­கும் ஏற்­ப­டக்­கூ­டிய சங்க டங்­களைக் கூடு­மா­ன­வரை குறைத்­துக்­கொள்ள ஏது­வாக கட்டம் கட்­ட­மாக நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­றும்.

இப்­போ­தைய பொங்­கோல் ரயில் நிலை­யம் திருத்தி அமைக்­கப்­படும்.

அந்த நிலை­யத்­தில் வந்திறங்கும் பய­ணி­கள், புதிய குறுக்குத் தீவு வழித்­த­டத்­தில் அமை­யும் நிலை­யங்­க­ளுக்­கும் வடக்கு-கிழக்கு வழித்­த­டம், இல­கு­ரக வழித்­த­டம் ஆகி­ய­வற்­றில் உள்ள நிலை­யங்­களுக்­கும் மாறிச் செல்ல முடி­யும்.

குறுக்­குத் தீவு எம்­ஆர்டி வழித்­தடம் சிங்­கப்­பூ­ரின் எட்­டா­வது எம்ஆர்டி வழித்­த­ட­மா­கும்.

குறுக்­குத் தீவு வழித்­த­டத்­தின் முதல் கட்­டம் 29 கி.மீ. நீளம் இருக்­கும். அதில் 12 ரயில் நிலை­யங்­கள் அமைந்து இருக்­கும். அதற்­கான கட்­டு­மா­னப் பணி­கள் தொடங்­கி­விட்­டன. 2030ல் அவை நிறை­வடை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இரண்­டாம் கட்­டம் 15 கி.மீ. தொலை­வுக்கு இருக்­கும். இதில் ஆறு சுரங்க ரயில் நிலை­யங்­கள் அமைந்து இருக்­கும். குறுக்­குத் தீவு வழித்­த­டத்­தின் மூன்­றாம் கட்டம் பற்­றிய விவ­ரங்­கள் உரிய நேரத்­தில் அறி­விக்­கப்­படும் என்று ஆணை­யம் தெரி­வித்­தது.

பொங்­கோல் நீட்­டிப்புத் திட்­டம் 7.3 கி.மீ. தொலை­வுக்கு இருக்­கும். அதில் நான்கு சுரங்­க­ நி­லை­யங்கள் அமைந்து இருக்­கும். அவற்­றில் மூன்று நிலை­யங்­கள் முனை­யங்­களாக இருக்­கும் என்று தெரி விக்கப்பட்டு உள்ளது.