புளோக் 91 ஹெண்டர்சன் சாலையில் உள்ள ஈரறை வாடகை வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் தீயை அணைக்கச் சென்ற தேசிய சேவையாளரான எட்வர்ட் எச். கோ உயிரிழந்தார்.
இது குறித்து ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தியுள்ள சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, அவரது உயிரிழப்புக்கு மின்சாரம் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. படுக்கை அறையில் மின்கசிவு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை தீ விபத்தின்போது 19 வயது கார்ப்பரல் கோ, சமையல் அறையில் மயங்கிக் கிடந்தார். அவரை குடிமைத் தற்காப்புப் படை அதி காரிகள் மீட்டு உயிர்ப்பிக்க முயற்சி செய்து, பின்னர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
கார்ப்பரல் கோ, 2021
நவம்பரில் சிங்கப்பூர் குடிைமத் தற்காப்புப் படையில் ேசர்ந்தார். ேதசிய சேவை முடித்தவுடன் மருத்துவப் பள்ளியில் ேசர ேவண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது.
நேற்று முதல் அவரது கண்விழிப்புச் சடங்கு நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. செவ்வாய்க் கிழமை அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

