செஞ்சா உணவங்காடி நிலையத்தில் குவிந்த மக்கள்

செஞ்சா உணவங்காடி நிலையத்தில் குவிந்த மக்கள்

2 mins read
650074b0-7d72-4b35-aa13-1ef5642d8436
செஞ்சா உண­வங்­காடி நிலை­யத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

புக்­கிட் பாஞ்­சாங்­கில் உள்ள செஞ்சா உண­வங்­காடி நிலை­யம் நேற்று திறக்­கப்­பட்­ட­போது 4,000க்கும் மேற்­பட்­டோர் அங்கு குவிந்­த­னர். மிஷெ­லின் தகுதி பெற்ற பிரபல உணவகம் உட்­பட மொத்­தம் 28 உணவுக் கடை­கள் இங்கு இடம்­பெற்­றுள்­ளன.

ஒரு சமூக நிறு­வ­ன­மாக செயல்­படும் இந்த உண­வங்­காடி நிலை­யத்­தில் கட்­டுப்­ப­டி­யா­கும் விலை­யில் பலதரப்பட்ட உணவு வகைகள் விற்­கப்­ப­டு­கின்­றன. பிர­தான உண­வின் விலை 2.80 அல்­லது 3.50 வெள்­ளி­யில் தொடங்கு­ கிறது. ஃபேர்பி­ரைஸ் குழு­மம் நடத்­தும் செஞ்சா உண­வங்­காடி நிலை­யத்­தில் முதல் முறை­யாக 'வாரோங் ரைஸ் கார்­டன்' உண­வும் விற்­கப்­ப­டு­கிறது.

முஸ்­லிம் வாடிக்­கை­யா­ளர்­களுக்­கான 'ரைஸ் கார்­டன்' சமூ­கத் திட்­டத்­தின் கீழ் இந்த ஹலால் உணவு தயா­ரிக்­கப்படு­கிறது. 'நாசி சம்­போர்' என மலா­யில் குறிப்­பி­டப்­படும் உணவு மிக­வும் குறை­வாக இரண்டு வெள்ளியில் தொடங்கு­கிறது.

நேற்று மாலை 3.00 மணி வரை கூட்­டம் இருந்­தது என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது. பெரும்­பா­லான கடை­களில் நீண்ட வரிசை காணப்­பட்­டது. சில கடை­களில் வாடிக்­கை­யா­ளர்­கள் முப்பது நிமி­டங்­க­ளுக்கு மேல் காத்­தி­ருந்­த­னர்.

ஹாலந்து புக்­கிட் தீமா குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பினர் களான எட்­வர்ட் சியா, டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், புக்கிட் பாஞ்­சாங் தனித்­தொ­குதி நாடாளு மன்ற உறுப்­பி­ன­ரான லியாங் எங் ஹுவா ஆகிய மூவ­ரும் புதிய உண­வங்­கா­டி நிலையத்தை சுற்றிப் பார்த்து கடைக்­கா­ரர்­க­ளி­ட­மும் வாடிக்கையாளர்­க­ளி­ட­மும் உரை­யா­டி­னர்.

அறு­பது ஆண்­டு­க­ளாக செயல்படும் 'தியோச்சு' பாணி வாத்து உணவுக்குப் பிரபல மான 'ஹெங் ஜி கூஸ் அண்ட் டக் ரைஸ்' கடையும் இங்கு உள்ளது.