டுரியான் விலையில் சரிவு

1 mins read
3790cd1b-ea26-4053-8389-01acb6573b7e
-

டுரியான் பழத்தின் விலை திடீரென வீழ்ச்சி கண்டுள்ளது.

ஒரு கிலோ மிகவும் பிரபலான 'முசாங் கிங்' டுரியானின் விலை இப்போது 15 முதல் 16 வெள்ளிக்கு விற்கப்படுகிறது என்று துரியான் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். மலேசியாவின் பாஹாங், ஜோகூர், ஜென்டிங் ஹைலண்ட்ஸ் ஆகிய இடங்களில் உள்ள தோட்டங் களிலிருந்து துரியான் வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கடைக்காரர்கள் தெரிவித்த னர். பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு டுரியானின் விலை தற்போது சரிந்துள்ளது என்று தோ பாயோவில் உள்ள '211 ஹவுஸ் ஆஃப் டுரியான்' கடைக்காரர் ஊய் மெங் லீ, 70, தெரிவித்தார்.