'நான்கு மட்டுமே வீவக முதன்மை வட்டாரங்கள்'

'நான்கு மட்டுமே வீவக முதன்மை வட்டாரங்கள்'

1 mins read
6f9d1c7e-d5c3-43b9-b986-7f5dfb70c37f
-

மத்திய வட்டாரம், காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன், புக்கிட் மேரா ஆகிய நான்கு நகரங்கள் மட்டுமே தற்சமயம் பொது வீடமைப்புத் திட்டத் திற்கான முதன்மை வட்டாரங்களாகக் கருதப்படும்.

இந்த நான்கு நகரங் களிலும் சந்தை மதிப்பு உள்ளிட்ட அம்சங்களை வைத்து தேவைக்கு ஏற்ப கட்டித் தரப்படும் வீட்டுத் திட்டம் (பிடிஓ) இடம்பெறு வதை வீவக முடிவு செய்யும்.

சண்டே டைம்ஸ், லியான்ஹ சாவ்பாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ இதனை தெரிவித்தார்.

இந்த நான்கு நகரங்களுக்குள்ளும் முதன்மை வட்டார பொது வீடமைப்புத் திட்டத்தின்கீழ் வராத 'பிடிஓ' திட்டங்களும் இடம்பெற வாய்ப்புள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

உதாரணமாக, கடந்த நவம்பர் மாதம் வெளியிடப் பட்ட மூன்று குவீன்ஸ்டவுன் 'பிடிஓ' திட்டங்களில் அலெக் சாண்டிரா மருத்துவமனைக்கு அடுத்துள்ள இடத்தைத் தவிர உலு பாண்டான், கிம் மோ ஆகிய இரண்டும் முதன்மை வட்டாரத் திட்டத்தின்கீழ் இடம்பெற்றன.

ஆனால் பிரபலமான தோ பாயோ, பீஷான் முதிர்ச்சியடைந்த குடியிருப்புப் பேட்டைகள் நகர மையத் திலிருந்து தொலைவில் இருப்பதால் அவை முதன்மை வட்டாரங்களாகக் கருதப் படாது என்று அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.