சமூக சேவை, மன நலத் துறைகளில் பணியாற்ற விரும்பும் மாணவர்கள் பலதுறைத் தொழிற்கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கு தெமாசெக் அறநிறுவனத்தின் உபகாரச் சம்பளத்திற்கு இனி விண்ணப்பிக்கலாம்.
ஏறக்குறைய 88 பேருக்கு உதவும் நோக்கில் $1.07 மில்லியனை அறநிறுவனம் ஒதுக்கியுள்ளது.
நன்யாங், நீ ஆன், தெமாசெக் ஆகிய பலதுறைத் தொழிற்கல்லூரிகளிலும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
குறைந்த வருமானக் குடும்ப மாணவர்களுக்கும் பணியிடை மாற்றம் செய்ய விரும்பும் நடுத்தர வயதினருக்கும் இது வழங்கப்படும். சிங்கப்பூரில் மூப்படையும் மக்கள்தொகை விரைவாக அதிகரிக்கும் நிலையில் சிங்கப்பூரர்களை இத்துறைகளுக்கு ஈர்ப்பது நோக்கம்.

