செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
0260ea2e-aa3b-4173-b8c9-1b170d26219f
-

'ஜிசிஇ' வழக்கநிலைத் தேர்வு முடிவுகள் இம்மாதம் 19ஆம் தேதி வெளியாகும்

இவ்­வாண்­டின் பொதுக்­கல்­விச் சான்­றி­தழ் வழக்­க­நிலைத் தேர்வு முடி­வு­கள் இம்­மா­தம் 19ஆம் தேதி வெளி­யி­டப்­படும். கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகமும் நேற்று இதனை அறிவித்தன. மாணவர்கள் 19ஆம் தேதி பிற்­ப­கல் இரண்டு மணி­யி­லி­ருந்து அவரவர் பள்­ளி­களில் முடி­வு­க­ளைப் பெற்­றுக்கொள்­ள­லாம். பெற்­றோரோ பரா­ம­ரிப்­பா­ளரோ அவர்களுடன் செல்­ல­ இயலும். உடல்நிலை சரியில்லாத மாண­வர்­கள் தேர்வு முடி­வு­களைப் பெற்­றுக்­கொள்­ள பள்­ளி­க்­குச் செல்ல வேண்­டாமென அறிவுறுத்தப் பட்டுள்ளனர். கழகத்தின் இணை­யப் பக்­கத்­தில் இம்மாதம் 19ஆம் தேதி பிற்­ப­கல் 2.45 மணி­முதல் இம்மாதம் 30ஆம் தேதி வரை முடி­வு­க­ளைத் தெரிந்துகொள்­ள­லாம்.

குறுகியகாலக் கல்விச் சான்றிதழை அதிகம் நாடும் சிங்கப்பூரர்கள்

பணி மேம்பாட்டுக்கு உதவும் சான்றிதழ்களுக்கான குறுகிய காலக் கல்வியைக் கூடுதலான சிங்கப்பூரர்கள் நாடுவதாகத் தெரியவந்துள்ளது. ஒப்புநோக்க சென்ற ஆண்டைவிட கூடுதலாக 42 விழுக்காட்டினர் இவ்வாண்டு இப்பாடத் திட்டங்களை நாடியதாக இணையக் கல்விச் சேவை வழங்கும் அமெரிக்க நிறுவனமான 'கோர்ஸ் இரா' கூறியது. பெரும்பாலும் தரவு ஆய்வு, திட்ட நிர்வாகம் ஆகியவை தொடர்பான பாடங்களில் சிங்கப்பூரர்கள் ஆர்வம் செலுத்துகின்றனர். இவற்றை மூன்று முதல் 12 மாதங்களில் முடித்துவிடலாம் என்பதுடன் இவற்றுக்கான சான்றிதழ்களை, துறைசார்ந்த நிறுவனங்கள் அங்கீகரிப்பதும் இதற்குக் காரணம்.