தோ பாயோ: கம்பத்தில் மோதிய கார்

தோ பாயோ: கம்பத்தில் மோதிய கார்

1 mins read
584b77e4-d215-44d9-a00b-080967a7ddbb
-

தோ பாயோ ஈஸ்ட், தோ பாயோ லோரோங் 6 ஆகி­ய­வற்­றுக்கு இடை­யி­லான சாலைச் சந்­திப்­பில் நேற்­றுக் காலை கார் ஒன்று விளக்­குக் கம்­பத்­தில் மோதி­ய­து. இதைத் தொடர்ந்து 'பென்ஸ்' ரக காரின் 57 வயது ஓட்­டு­நர் சிகிச்சைக்காக மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு­செல்­லப்­பட்­டார்.

சம்­ப­வம் குறித்து நேற்­றுக் காலை 9.38 மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­த­தா­கக் காவல்­துறை தெரிவித்தது.

அந்த கார் நடை­பாதை மேலேறி விளக்­குக் கம்­பத்தை இடித்த பின்­னர் நின்­ற­து. விபத்­தி­னால் அரு­கி­லி­ருந்த கம்பி வேலி சேத­ம­டைந்­தது.

கார் ஓட்­டு­நர் சுய­நி­னை­வு­டன் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டார்.

விபத்து குறித்த விசா­ரணை தொடர்­கிறது.