மணல் உரையாடல் கவிதை நூலின் ஆங்கில மொழியாக்கம்

மணல் உரையாடல் கவிதை நூலின் ஆங்கில மொழியாக்கம்

2 mins read
43d5a822-4390-4d8c-a858-7b346cc30c65
-

பொன்­மணி உத­ய­கு­மார்

'மணல் உரை­யா­டல்' எனும் தலைப்­பில் சென்னை தமிழ் அலை பதிப்­பக உரி­மை­யா­ளர் இசாக் எழு­திய கவி­தைத் தொகுப்­பின் ஆங்­கில மொழி­யாக்க நூலை டாக்­டர் எச் முக­மது சலீம் எழு­தி­யுள்­ளார்.

'மியூ­சிங்ஸ் இன் த டியூன்ஸ்' என்ற தலைப்­பி­லான இந்­நூ­லின் வெளி­யீடு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஜாமியா இஸ்­லா­மிய நிலை­யத்­தில் நடந்­தது.

இதில் சிறப்பு விருந்­தி­ன­ராக உள்­துறை மற்­றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் முகம்­மது ஃபைஷால் இப்­ரா­ஹிம் கலந்து கொண்டு உரை­யாற்­றி­னார்.

தனது 90வது ஆண்டை கொண்­டா­டும் ஜாமியா சிங்­கப்­பூர் அற­நிறு­வ­னத்தை வாழ்த்­திய அவர், கலை, இலக்­கி­யம், கலா­சா­ரம் போன்­ற­வற்றை மேம்­ப­டுத்­து­வது, ஒற்­று­மை­யை­யும் அமை­தி­யை­யும் நன்­மை­யை­யும் வளர்க்க ஜாமியா எடுக்­கும் முயற்­சி­களில் ஒன்­றென சுட்­டிக் காட்­டி­னார்.

அதோடு, இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ரை­யும் சிங்­கப்­பூர் இந்­தி­யர்­க­ளை­யும் ஒன்­றி­ணைக்க இது போன்ற புத்­தக வெளி­யீ­டு­கள் வழி­வ­குக்­கின்­றன என்­றும் அவர் கூறி­னார்.

மூல நூலை இயற்­றிய கவி­ஞர் இசாக் இதன் மூலம், உல­கெங்­கு­முள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­கள் எதிர்­கொள்­ளக் கூடிய சிக்­கல்­க­ளை­யும் மன வலி­க­ளை­யும் வெளிப்­படுத்த முனைந்­துள்­ளார்.

இந்­நூலை ஆங்­கி­லத்­தில் மொழி­பெ­யர்த்­துள்­ளார் ஜாமியா சிங்­கப்­பூர் அற­நி­று­வ­னத்­தின் சமூக நல்­லி­ணக்­கப் பிரி­வின் மூத்த இயக்­கு­நர் டாக்­டர் சலீம்.

'மியூ­சிங்ஸ் இன் த டியூன்ஸ்' வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் பங்­க­ளிப்பை உண­ர­வும் அவர்­க­ளைப் பற்றி மற்­ற­வர்­கள் கொண்­டுள்ள கண்­ணோட்­டம் மாற­வும் வழி­வ­குக்­கும் என்­றார்.

சிங்கப்­பூ­ரின் இலக்­கிய வளர்ச்­சிக்­குச் செழுமை சேர்க்­கும் வகை­யில் தர­மான தமிழ்ப் படைப்­பு­களை ஆங்­கி­லம், சீனம், மலாய் ஆகி­ய­வற்­றில் மொழி­பெ­யர்க்­கப்­பட வேண்­டு­மென விரும்­பு­கி­றார் இவர்.