மருத்துவக் கருவி தயாரிப்பு நிறுவனம் $100 மி. முதலீடு

மருத்துவக் கருவி தயாரிப்பு நிறுவனம் $100 மி. முதலீடு

2 mins read
7a28d6b9-8696-4fcf-9e6c-579b8a89cc19
-

உள்­ளூர் மருத்­து­வக் கருவி தயா­ரிப்பு நிறு­வ­ன­மான 'பஸுட் சிங்­கப்­பூர்' 2023ஆம் ஆண்டு முதல் நாட்­டின் பல பகு­தி­க­ளி­லும் 20 சில்­லறை விற்­ப­னைக் கடை­க­ளைத் திறக்­க­வி­ருக்­கிறது.

சில்­லறை விற்­ப­னைத் துறை­யில் தனது தொழிலை விரி­வு­ப­டுத்­தும் வகை­யில் அடுத்த மூவாண்­டு­களில் $100 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தொகையை பஸுட் நிறு­வ­னம் முத­லீடு செய்­ய­வுள்­ளது.

உட்­லண்ட்­சில் 200,000 சதுர அடிக்­கு­மேலான பரப்­ப­ள­வு­டன் மூன்று தளங்­க­ளைக் கொண்ட புதிய தொழிற்­சா­லை­யை­யும் ஆய்வு, உரு­வாக்க மையத்­தை­யும் அது திறக்­க­ இருக்­கிறது.

கடந்த 2020ல் சிங்­கப்­பூ­ரில் தொடங்­கப்­பட்ட அந்­நி­று­வ­னம் தற்­போது ராஃபிள்ஸ் மருத்துவமனை யில் ஒரு சில்­லறை விற்­பனைக் கடை­யைக் கொண்­டுள்­ளது.

சிறு­நீர், ரத்­தச் சர்க்­கரை, கொழுப்­புப் பொருள் பரி­சோ­த­னைக் கரு­வி­கள், கைய­டக்க இசிஜி இத­யப் பரி­சோ­த­னைக் கரு­வி­கள் மருத்­து­வக் கரு­வி­க­ளை­யும் இல்­லப் பயன்­பாட்­டுக் கரு­வி­க­ளை­யும் திறன்­க­டி­கா­ரங்­கள் போன்­ற­வற்­றை­யும் வாழ்­வி­யல் கரு­வி­க­ளை­யும் அந்­நி­று­வ­னம் தயா­ரித்து வரு­கிறது.

"வீட்­டி­லேயே சுய­ப­ரி­சோ­தனை செய்­து­கொண்டு, முன்­கூட்­டியே நோய் அறி­கு­றி­க­ளைக் கண்­ட­றிய மருத்­துவ ரீதி­யில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட, பயன்­ப­டுத்­து­வ­தற்கு எளி­தான எங்­க­ளது நிறு­வ­னத்­தின் உடல்­ந­லப் பரி­சோ­த­னைக் கரு­வி­கள் உத­வும். அதற்­கேற்ப, நமது வாழ்க்­கை­மு­றை­யை­யும் அன்­றா­டச் செயல்­பா­டு­களை­யும் மாற்­றி­ய­மைத்­துக்கொண்டு உடல்­ந­லம் பேண­லாம்," என்று பஸுட் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி ஃபிராங்கி ஃபான், 53, கூறி­னார்.

அத்­து­டன், பேர­கான், ஜுவல் சாங்கி, மரினா பே சேண்ட்ஸ் போன்ற இடங்­களில் அமை­யும் சில்­லறை விற்­ப­னைக் கடை­களில் வாடிக்­கை­யா­ளர்­கள் குறிப்­பிட்ட சில பரி­சோ­த­னை­க­ளைச் செய்­து­கொள்ள முடி­யும் என்­றும் அவர் சொன்­னார்.

"தொழில்­நுட்­பம், மின்­ன­லக்­கக் கரு­வி­கள் குறித்து அறி­மு­கம் இல்­லாத மூத்த குடி­மக்­க­ளுக்கு எங்­கள் பணி­யா­ளர்­க­ளால் உதவ முடி­யும்," என்­றார் சீனா­வில் பிறந்­த­வரான திரு ஃபான்.

பொது­மக்­கள் இல்­லப் பயன்­பாட்­டுப் பரி­சோ­த­னைக் கரு­வி­க­ளைப் பரி­சோ­தனை மையத்­தில் சோதித்­துப் பார்க்­க­லாம். அம்­மை­யத்­தில் உள்ள நிபு­ணத்­துவ மருத்­து­வக் கரு­வி­யைப் பயன்­ப­டுத்தி பரி­சோ­தனை செய்­து­கொள்ள அங்கு மருத்­து­வப் பணி­யா­ளர்­களும் இருப்­பர்.

தங்­க­ளது மருத்­து­வக் கரு­வி­கள் சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தின் உரி­மம் பெற்­றவை என்­றும் பஸுட் நிறு­வ­னம் தெரி­வித்­தது.

இத­னி­டையே, தங்­க­ளது சில்­லறை விற்­ப­னைக் கடை­க­ளுக்­காக சிங்­கப்­பூ­ரில் குறைந்­தது 200 பேரை­யும் தொழிற்­சாலை மற்­றும் ஆய்வு, உரு­வாக்க மையத்­திற்­காக 100 பேரை­யும் வேலைக்கு எடுப்­போம் என்று பஸுட் நிறு­வ­னத்­தின் பேச்­சா­ளர் தெரி­வித்­துள்­ளார்.