நிலப் போக்குவரத்து ஆணையத்தை ஏமாற்றியதாக மூவர்மீது குற்றச்சாட்டு

நிலப் போக்குவரத்து ஆணையத்தை ஏமாற்றியதாக மூவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
3e907ef2-fbe7-43d9-9bec-88e40413b03d
-
multi-img1 of 3

பேருந்­து­களில் வேகக்­கட்­டுப்­பாட்டு கரு­வி­கள் பொருத்­தப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­களை ஏமாற்­றி­யது உள்­ளிட்ட பல குற்­றச்­சாட்­டு­களை மூவர் எதிர்­நோக்­கு­கின்­ற­னர்.

போக்­கு­வ­ரத்து சார்ந்த வெவ்­வேறு நிறு­வ­னங்­களில் பணி­யாற்றி வந்த அவர்­கள், வேகக் கட்­டுப்­பாட்­டுக் கரு­வி­கள் தொடர்­பில் சதித்­திட்­டம் தீட்டி, ஏமாற்­றி­ய­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

குற்­றச் செயல்­க­ளைப் புரிந்­த­தா­கக் கூறப்­படும் சம­யத்­தில் டியோ சியோ மெங், 50, டி&எல் டிரான்­சிட் நிறு­வ­னத்­தின் இயக்­கு­ந­ராக இருந்­தார். சுந்­த­ரம் ரத்­தி­னம், 50, எஸ்வி பேருந்­துப் போக்­கு­வ­ரத்து சேவை­கள் நிறு­வ­னத்­தின் ஒரே உரி­மை­யா­ள­ராக இருந்­தார்.

மூன்­றா­ம­வ­ரான டீ வெய் சை, 44, லீ சொங் எஞ்­சி­னி­ய­ரிங் எனும் வாக­னச் சோதனை நிறு­வ­னத்­தில் பொறி­நுட்­ப­ராக (மெக்­கா­னிக்) வேலை­செய்து வந்­தார்.

2017 ஜூன் மாதத்­திற்­கும் 2018 ஜன­வரி மாதத்­திற்­கும் இடை­யில் இரு­முறை, பேருந்­தில் வேகக் கட்­டுப்­பாட்டு கருவி பொருத்­தப்­பட்டு, அது செயல்­பாட்­டில் இருப்­ப­தா­கப் பொய் சொல்லி, இம்­மூ­வ­ரும் சதி செய்து 'வைகோம்' வாகன ஆய்வு நிறு­வ­னத்­தின் ஆய்­வா­ளர் ஒரு­வரை ஏமாற்­றி­ய­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

அத­னைத் தொடர்ந்து, காவல்­துறை வேகக்­கட்­டுப்­பாட்­டுச் சோத­னை­யில் அப்­பே­ருந்து தேர்ச்சி பெற்று­விட்­ட­தா­கச் சான்று தரும்­படி இம்­மூ­வ­ரும் அந்த ஆய்­வா­ள­ரைத் தூண்­டி­ய­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

கடந்த 2015 ஜூலைக்­கும் 2018 ஜன­வ­ரிக்­கும் இடை­யில் டியோ எட்டு முறையும் சுந்­த­ரம் ஒரு­மு­றை­யும் நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்தை ஏமாற்­றி­ய­தா­கக் குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

பேருந்து 60 கி.மீ. வேகத்­திற்கு மேல் செல்­லும் வகை­யில், 2017 ஜூனில் அல்­லது அதற்­கு­முன் வேகக் கட்­டுப்­பாட்­டுக் கரு­வியை மாற்­றி­ய­மைத்­தது உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டு­களை டீ எதிர்­நோக்­கு­கிறார்.

குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும் நேற்று $5,000 வெள்ளிக்குப் பிணை வழங்கப்பட்டது. அவர்கள்மீதான வழக்கு வரும் ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏமாற்­றிய குற்­றம் மெய்ப்­பிக்­கப்­பட்­டால், குற்­ற­வா­ளிக்கு மூவாண்டு­கள்­வரை சிறைத்­தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்கப்படலாம்.