மின்னூட்டி முனை பற்றிய நிகழ்நேரத் தகவலை அறிய உதவும் செயலி

மின்னூட்டி முனை பற்றிய நிகழ்நேரத் தகவலை அறிய உதவும் செயலி

1 mins read
099cd147-0af1-4315-a9b9-383fea25be75
-

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான ஏறத்தாழ 700 மின்னூட்டி முனைகளைப் பற்றிய நிகழ்நேரத் தகவல்களை 'மைடிரான்ஸ் போர்ட். எஸ்ஜி' செயலி வழியாக ஓட்டுநர்கள் அறிந்து கொள்ளலாம். நிலப் போக்குவரத்து ஆணையம் சோதனை முயற்சியாக இந்த வசதியைக் கடந்த மாதம் 28ஆம் தேதியிலிருந்து அந்தச் செயலியில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அச்செயலியில் கம்ஃபர்ட்டெல்குரோ என்ஜீ மற்றும் எஸ்பி மொபிலிட்டி நிறுவனங்களின் கிட்டத்தட்ட 1,400 மின்னூட்டி முனைகள் குறித்த விவரம் பட்டியலிடப் பட்டுள்ளது. இப்போதைக்கு இவ்விரு நிறுவனங்கள் மட்டுமே இந்தச் சோதனை முயற்சியில் இடம்பெற்றுள்ளன. அதில் மேலும் பல மின்சார வாகன மின்னூட்டி சேவை வழங்குநர்களை இணைப்பது தொடர்பில் ஆணையம் பணியாற்றி வருகிறது.