மறைந்த தீயணைப்பாளர் எட்வர்ட்டுக்கு பதவி உயர்வு

மறைந்த தீயணைப்பாளர் எட்வர்ட்டுக்கு பதவி உயர்வு

2 mins read
f320bf9f-d29c-44d4-bcef-795eeb306d15
-

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் 23 நிலையங்களிலும் தீ எச்சரிக்கை ஒலி

ஹெண்­டர்­சன் ரோடு வாடகை வீடு ஒன்­றில் மூண்ட தீயை அணைக்க முயன்று அந்த முயற்சி­யில் மாண்­டு­விட்ட 19 வயது முழு­நேர தேசிய சேவை­யா­ளர் முதல் நிலை சார்­ஜண்­டாக மர­ணத்­திற்­குப்­பிந்­திய பதவி உயர்வு பெற்­றார்.

முதல்­நிலை சார்­ஜண்ட் எட்­வர்ட் எச். கோவைப் பெரு­மைப்­ப­டுத்­தும் வகை­யில் நேற்று சிங்­கப்­பூர் குடிமைத் தற்­காப்­புப் படை­யின் 23 தீய­ணைப்பு நிலை­யங்­க­ளி­லும் தீ எச்­ச­ரிக்கை ஒலி ஒலித்­தது.

உபி­யில் இருக்­கும் அந்­தப் படை­யின் தலைமையகத்­தி­லும் ஐந்து பிரி­வு­க­ளின் தலை­மை­யங்­க­ளி­லும் குடி­மைத் தற்­காப்­புப் பயி­ல­கத்­திலும் நேற்று மௌன அஞ்சலி நடந்­தது. அத­னைத் தொடர்ந்து சடங்­கு­பூர்வ இறு­திச்­ச­டங்கும் நடந்தது.

அவ­ச­ர­கால அழைப்பு வரும்­போது தீய­ணைப்பு ஊழி­யர்­களை உட­ன­டி­யா­கச் சம்­பவ இடத்­துக்கு விரைந்­துச் செல்ல விடுக்­கக்­கூ­டிய எச்­ச­ரிக்கை அறி­விப்­பாக தீ எச்­ச­ரிக்கை ஒலி எழுப்­பப்­ப­டு­கிறது.

அந்த ஒலி நேற்று சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படைப் பிரிவு கள் அனைத்­தி­லும் ஒலித்­தது.

இது அந்த முழு­நேர தேசிய சேவை­யா­ள­ருக்கு விடுக்­கப்­பட்ட இறுதி அழைப்பைக் குறிப்­ப­தாக இருந்­தது.

கால­மான முதல்­நிலை சார்­ஜண்ட் கோ, மத்­திய தீய­ணைப்பு நிலை­யத்­தில் பணி­யில் இருந்து வந்­தார்.

அலெக்­சாண்­டிரா, மரினா பே, பொங்­கோல் தீய­ணைப்பு நிலை­யங்­களில் காவல்­துறை அதி­கா­ரி­களும் மௌன அஞ்சலியில் கலந்­து­கொண்­ட­னர்.

குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் உபி தலை­மை­ய­கத்­தில் சுமார் 300 அதி­கா­ரி­கள் கூடி ஒரு நிமி­டம் மௌன அஞ்சலி செலுத்­தி­னர்.

அதற்­குப் பிறகு குடி­மைத் தற்­காப்­புப் படை ஆணை­யர் எரிக் யாப், முதல்­நிலை சார்­ஜண்ட் கோவுக்­குப் புக­ழா­ரம் சூட்­டி­னார்.

முதல்­நிலை சார்­ஜண்ட் கோவின் குடும்­பத்­திற்­கும் நண்­பர்­க­ளுக்­கும் அன்­பர்­க­ளுக்­கும் அவர் அனு­தா­பம் தெரி­வித்­துக்­கொண்­டார்.

அவ­ரு­டைய மர­ணம் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படையை பெரி­தும் சங்­க­டப்­ப­டுத்­தி­விட்­ட­தாக அவர் கூறி­னார்.

"முதல்­நிலை சார்­ஜண்ட் கோவின் சுய­ந­லம் பாராத உணர்வு, நிபுணத்­து­வம், கடப்­பாடு ஆகி­ய­வற்றை நாம் நினை­வு­கூர்­வோம்.

"முதல்­நிலை சார்­ஜண்ட் கோ தீயை வெற்­றி­க­ர­மான முறை­யில் அணைப்­ப­தில் எந்த அள­வுக்குப் பெரு­மைப்­ப­டு­வார் என்­பதை அவ­ருக்கு அணுக்­க­மா­கக் பழ­கி­ய­வர்­கள் அறி­வார்­கள்," என்­றார் அவர்.

குடி­மைத் தற்­காப்­புப் படை­யில் இருக்­கும் அனை­வ­ருக்­கும் முதல்­நிலை சார்­ஜண்ட் கோ ஓர் ஊக்க­சக்­தி­யாக இருப்­பார்­ என்று அவர் கூறினார்.

சிங்­கப்­பூரை பாது­காப்­பாக வைத்­தி­ருக்­கும் பொறுப்பு இந்­தப் படை­யு­டன் பின்­னிப் பிணைந்த ஒன்று என்றும் ஆணையர் தெரிவித்தார்.

"அவ­ச­ர­ கா­லங்­களில் உத­விக்கு இந்­தப் படை அதி­கா­ரி­களை பொது­மக்­கள் நம்பி இருக்­கி­றார்­கள்.

"அத்­த­கைய அவ­ச­ர­ கா­லங்­களில் தேவைப்­ப­டக்­கூ­டிய நட­வடிக்கை­களில் ஈடு­படும் அதி­கா­ரி கள் வாழ்வா, சாவா என்ற போராட்­டத்தை எதிர்­நோக்­கு­கி­றார்­கள்," என்­றும் ஆணை­யர் குறிப்­பிட்­டார்.

"முதல்­நிலை சார்­ஜண்ட் கோவைப் போலவே சிங்­கப்­பூ­ரர்­களுக்குப் பெரு­மை­யோ­டும் அர்ப்­பணிப்பு உணர்­வோ­டும் தொடர்ந்து நாங்­கள் சேவை­யாற்­று­வோம்," என்­றும் ஆணையர் உறுதி கூறி­னார்.