செய்தித் துறையில் இளையர்களை மேம்படுத்தும் திட்டம்

செய்தித் துறையில் இளையர்களை மேம்படுத்தும் திட்டம்

3 mins read
188f3ea0-fca9-47c2-85c3-3d1423b405af
-

மோன­லிசா

இளை­யர்­கள் செய்­தித் துறை­யில் தங்­க­ளு­டைய திற­மை­களை மேம்

­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்­பு­களை வழங்­கும் நோக்­கில் எஸ்­பி­எச் மீடி­யா­வும் தேசிய இளை­யர் சாதனை விருது மன்­ற­மும் நேற்று புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டன.

இந்த ஒப்­பந்­தத்­தின் மூலம் பத்­தி­ரிகைத் துறை­யின் திறன்­க­ளைக் கற்­றுக்­கொள்­ள­வும் எஸ்­பி­எச் மீடி­யா­வின் தயா­ரிப்­பு­க­ளின் வளர்ச்­சி­யில் பங்­கு­பெ­ற­வும் இளை­யர்­

க­ளுக்கு வாய்ப்­ப­ளிக்­கப்­படும்.

சிங்­கப்­பூ­ரின் பசு­மைத் திட்­டம் 2030ஐ ஆத­ரிக்­கும் இவ்­வொப்­பந்­தம் அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் 1ஆம் தேதி முதல் டிசம்­பர் மாதம் 31ஆம் தேதி வரை­யி­லான ஓராண்டு ­கா­லத்­திற்கு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

எஸ்­பி­எச் மீடியா குழு­மத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு­வாட்டி டியோ லே லிம் மற்­றும் தேசிய இளை­யர் சாதனை விருது மன்­றத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் திரு ஜேம்ஸ் சோ இவ்­வொப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­ட­னர்.

இந்த ஒப்­பந்­தத்­தின் கீழ் 'இளை­யர்­கள் முன்­னெ­டுக்­கும் செய்­தித் துறை' எனும் திட்­டத்­தில் தொடக்­கக் கல்­லூரி, தேசிய கல்­விக் கழ­கம், பல­து­றைத் தொழில்­கல்­லூரி, பல்­க­லைக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­றில் பயி­லும் ஆர்­வ­முள்ள இளை­யர்­கள் பங்­கு­கொள்­வார்­கள்.

இத்­திட்­டத்­தின் மூலம் இளை­யர்­க­ளுக்கு எழு­து­வ­தி­லும் கதை­சொல்­வ­தி­லும் புகைப்­ப­டக் கலை­யி­லும் பயிற்சி வழங்­கப்­படும்.

இளை­யர்­கள் மத்­தி­யில் ஊட­கத் துறை­யின் தாக்­கம், பயன்­பாட்டு முறை, புதிய செய்­தித் தளங்­கள், மின்­னி­லக்­கத் துறை செய்தி செய­லி­க­ளின் பயன்­பாடு போன்ற பல்­வேறு தலைப்­பு­களில் ஒவ்­வொரு காலாண்­டி­லும் கலந்­து­ரை­யா­டல் நிகழ்­வு­களும் நடை­பெ­றும்.

இளை­யர்­கள் எஸ்­பி­எச் மீடி­யா­வின் பல்­வேறு தயா­ரிப்­பு­க­ளின் உரு­வாக்­கத்­தி­லும் மேம்­பாட்­டி­லும் பங்­கு­கொள்­வார்­கள்.

இத்­து­டன் எஸ்­பி­எச் மீடி­யா­வின் வேலைப்­ப­யிற்­சிக் கல்வி மற்­றும் வழி­காட்­டு­தல் திட்­டங்­களில்

பங்­கு­கொள்­ளும் வாய்ப்­பு­களும் வழங்­கப்­படும்.

மேலும் இவ்­வொப்­பந்­தம் தேசிய இளை­யர் சாதனை விருது

மன்­றத்­தின் நீடித்த நிலைத்­தன்­மை­யு­டைய சிங்­கப்­பூரை உரு­வாக்­கும் பிர­சா­ரத்­தை­யும் ஆத­ரிக்­கிறது.

இதன் ஓர் அங்­க­மாக நீடித்த நிலைத்­தன்­மையை ஊக்­கு­விக்­கும் வித­மாக இளை­யர்­க­ளுக்­கான பல்­வேறு நட­வ­டிக்­கை­களும் பயிற்சிப் பட்­ட­றை­களும் ஏற்­பாடு செய்­யப்­ப­ட­வுள்­ளன.

இது­கு­றித்து பகிர்ந்த தேசிய இளை­யர் சாதனை விருது

மன்­றத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் திரு ஜேம்ஸ் சோ, "சிங்­கப்­பூ­ரின் எதிர்­கா­லத்தை வலி­மை­யாக்­கும் இளை­யர்­கள், நீடித்த நிலைத்­தன்­மை­யில் ஆர்­வம் செலுத்­து­வது மிக­வும் முக்­கி­யம்," என்று கூறி­னார்.

இந்­நி­கழ்­வில் துணைப் பிர­த­ம­ரும் பொரு­ளி­யல் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான ஹெங் சுவீ கியட் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்­டார்.

இந்­நி­கழ்­வின் ஓர் அங்­க­மாக இவ்­வாண்­டின் தொடக்­கத்­தில் ஜன­வரி மாதத்­தில் நடை­பெற்ற தேசிய அள­வி­லான கட்­டுரைப் போட்­டி­யின் பரி­ச­ளிப்­பும் இடம்­பெற்­றது. எஸ்­பி­எச் மீடி­யா­வும் தேசிய இளை­யர் சாதனை விருது மன்­ற­மும் இணைந்து நடத்­திய இப்­போட்­டி­யில் 300க்கும் மேற்­பட்ட இளை­யர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

நீடித்த நிலைத்­தன்­மையை வலி­யு­றுத்­தும் புத்­தாக்க வாழ்க்­கை­முறை சிந்­த­னை­களை இப்­போட்­டி­யில் இளை­யர்­கள் பரிந்­து­ரைக்­க­வேண்­டும்.

இப்­போட்­டி­யில் இரண்­டாம் பரிசு பெற்ற தொடக்­கக் கல்­லூரி மாண­வி­யான ரக்‌ஷிதா முரு­கன், 18, "சிங்­கப்­பூ­ரின் நீடித்த நிலைத்­தன்­மையை ஆத­ரிக்க அன்­றாட வாழ்­வில் செய்ய வேண்­டி­யவை பற்­றிய சிந்­த­னை­யை இப்­போட்டி தூண்­டி­யது.

"ஓர் இளை­ய­ராக சமூக பொறுப்­பு­ணர்­வு­டன் நடந்துகொள்ள ஊக்­கம் அளிக்­கும் வித­மா­க­வும் இப்­போட்டி அமைந்­தது," என்று கூறி­னார்.