ஹாலந்து வில்லேஜில் உள்ள மதுபானக்கூடத்தில் மதுபானம் அருந்திவிட்டு இன்னொரு வாடிக்கையாளரின் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் பெல்ஜியத்தைச் சேர்ந்த வில்லி ஃபிரிடா டி பெர்ம்.
பிறகு வாலா வாலா கெஃபே மதுபானக்கூடத்துக்கு வெளியே சிங்கப்பூர் நிரந்தரவாசியான பெர்ம்மை காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது அதிகாரி ஒருவரைத் தாக்கி அவரைப் பார்த்து வசைமொழி பாடினார் பெர்ம்.
56 வயது பெர்முக்கு நான்கு வாரச் சிறையும் $2,500 அபராதமும் விதிக்கப்பட்டது.

