பழைய மரச்சாமான்களால் உருவாக்கப்பட்ட நான்கு பெரிய மரச்சிற்பங்கள் செந்தோசா தீவில் உள்ள பலவான் கடற்
கரையில் மறைவான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் சில சிற்பங்களைக் காண வனப் பகுதிக்குள் சிறிது தூரம் செல்ல வேண்டும்.
மரச்சிற்பங்களைக் காண கட்டணம் செலுத்த தேவையில்லை. அவை 2024ஆம் ஆண்டு வரை செந்தோசாவில் இருக்கும்.
டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனை மையமாகக் கொண்ட நீடித்த நிலைத்தன்மை கலைஞரும் மறுசுழற்சி ஆர்
வலருமான தாமஸ் டம்போவால் இந்த நான்கு மரச்சிற்பங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தப் பெரிய மரச்சிற்பங்கள் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க இணையம் வழி இருவழித் தொடர்பு வரைபடம் உள்ளதாக செந்தோசா மேம்பாட்டுக் கழகம் தெரிவித்தது. பலவான் கடற்கரையில் அவ்வளவு பிரபலம் இல்லாத இடங்களை மக்கள் முன் கொண்டு போய் நிறுத்த இது உதவும் என அது கூறியது.

