எதிர்வரும் விடுமுறை நாள்களையொட்டி உணவகங்களில் அமர்ந்து உணவருந்த பல முன்
பதிவுகள் செய்யப்படலாம். அதுமட்டுமல்லாது, விலைமிக்க பல உணவுவகைகள் ஆர்டர் செய்யப்படலாம்.
ஆனால் அவை அனைத்தும் மோசடிகளாக இருக்கக்கூடும் என்று உள்ளூர் உணவு, பானத்துறை நிறுவனங்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, பெரும் அளவில் ஆர்டர்கள் வரும்போது அவற்றை உறுதி செய்த பிறகே விநியோகிப்பாளர்களிடமிருந்து உணவுப்பொருள்களை வாங்கும்படி உணவகங்களுக்கு அறிவுறுத்தப்
படுகிறது. கடந்த ஜூலை மாதத்தில் இதுபோன்ற மோசடி காரணமாக ஏறத்தாழ ஐந்து உணவு, பானத்துறை நிறுவனங்கள் குறைந்தது $73,500 இழந்ததாக காவல்துறை தெரிவித்தது.

