தமது பராமரிப்பில் இருந்த குழந்தைகளுக்கு விஷம் தந்தவருக்கு மீண்டும் சிறைத்தண்டனை

தமது பராமரிப்பில் இருந்த குழந்தைகளுக்கு விஷம் தந்தவருக்கு மீண்டும் சிறைத்தண்டனை

1 mins read
012737e7-ae56-46f7-8e8a-9cd57197d4b4
-

மகளைக் காயப்படுத்திய குற்றத்திற்காக 41 வயது சாடியா ஜமாரிக்கு நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ல் தமது பராமரிப்பில் இருந்த இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த குற்றத்திற்காக ஏற்கெனவே ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையை இவர் அனுபவித்து வருகிறார்.

கடந்த 2021 ஜூன் மாதம், தமது ஆண் நண்பரைத் திட்டிய பின்னர் 19, 20 வயதுகளில் இருந்த மகள்களையும் திட்டினார்.

பொருள்களை எடுத்து வீசினார். இரு மகள்களும் அதை சுத்தம் செய்ய உதவினர்.

பின்னர் 20 வயது மகளை அறையைச் சுத்தம் செய்யச் சொன்னார்.

அவர் கைபேசியில் பேசிக்கொண்டிருந்ததால் கோபமடைந்த சாடியா, அவரைத் திட்டியதுடன் துணி தொங்கவிடும் ஹாங்கரால் முதுகிலும் இடது தோளிலும் பலமுறை காயம் ஏற்படுமளவுக்கு அவரை அடித்தார்.

பிறகு ரேசர் பிளேடால் மகளின் இடது தொடையில் வெட்டுக்காயம் ஏற்படுத்தினார்.

வெளியே ஓடிய இரண்டாவது மகள் காவல் துறையை அழைத்தார்.

வேண்டுமென்றே காயமேற்படுத்திய குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார் சாடியா. சாடியா தனது சொந்த மகள்களை ஆறு வயதிலிருந்தே உடல் ரீதியாகவும், வார்த்தைகளாலும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார் என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

முன்னர் குழந்தைப் பராமரிப்பாளராகவும் தாதியாகவும் இருந்தபோது தமது பராமரிப்பில் இருந்த குழந்தைகளுக்கு தூக்க மருந்து உள்பட பல மருந்துகளை அவர் கொடுத்துள்ளார்.