பெட்ரா பிராங்கா தொடர்பில் சிங்கப்பூருடன் மீண்டும் பேச்சு நடத்த மலேசியா ஆர்வம்

பெட்ரா பிராங்கா தொடர்பில் சிங்கப்பூருடன் மீண்டும் பேச்சு நடத்த மலேசியா ஆர்வம்

1 mins read
0ed8849a-8a73-4cc6-94a8-f6075122bd06
-

பெட்ரா பிராங்கா விவ­கா­ரம் தொடர்­பில் சிங்­கப்­பூ­ரு­டன் பலன்பெறும் வகை­யில் பேச்சு நடத்த ஏது­வாக அது­தொ­டர்­பான அம்­சங்­களை மறு­ஆய்வு செய்­யும்­படி மலே­சி­யத் தலை­மைச் சட்ட அதி­கா­ரிக்கு உத்­த­ர­விட்­டி­ருப்­ப­தாக மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ராகிம் கூறி­யுள்­ளார்.

பெட்ரா பிராங்­கா­வின் உரி­மையை சிங்­கப்­பூ­ருக்கு வழங்­கி­யி­ருக்­கும் அனைத்­து­லக நீதி­மன்ற உத்­த­ர­வின் தாக்­கம் குறித்­தும் ஆரா­யும்­படி தலை­மைச் சட்ட அதி­காரி இட்­ரஸ் ஹரு­ணை திரு அன்­வார் கேட்­டுக்­கொண்­ட­தாக 'த ஸ்டார்' நாளேடு தக­வல் வெளி­யிட்­டுள்­ளது.

பத்து புத்தே என்று மலே­சி­யா­வால் அழைக்­கப்­படும் பெட்ரா பிராங்கா குறித்து நடத்­தப்­படும் பேச்­சால் இரு­த­ரப்பு உற­வைப் பாதிக்­கும் புதிய சிக்­கல்­கள் ஏதும் ஏற்­படு­வ­தைத் தாம் விரும்­ப­வில்லை என்று அமைச்­ச­ர­வை­யின் வாராந்­தரக் கூட்­டத்­துக்­குப் பிறகு பிர­த­மர் அன்­வார் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­யுள்­ளார்.

முன்­ன­தாக 2018ஆம் ஆண்­டில் அப்­போ­தைய மலே­சி­யப் பிர­த­மர் மகா­தீர் முக­மது பெட்ரா பிராங்கா தொடர்­பான அனைத்­து­லக நீதி­மன்­றத்­தின் உத்­த­ரவை மறு­ஆய்வு செய்­யக் கோரும் விண்­ணப்­பத்­தைத் திரும்­பப் பெற்­றார். அப்­போ­தைய தலை­மைச் சட்ட அதி­கா­ரி­யின் பரிந்­து­ரை­யின்­பே­ரில் அவர் அவ்­வாறு செய்­தார். ஆனால் அதில் கவ­னக்­கு­றைவு இடம்­பெற்­ற­தாக கடந்த அக்­டோ­ப­ரில் மலே­சிய அர­சாங்­கம் தெரி­வித்­தி­ருந்­தது.