மலேசியத் துணைப் பிரதமர்களுக்கு சிங்கப்பூர் துணைப் பிரதமர்கள் வாழ்த்து

மலேசியத் துணைப் பிரதமர்களுக்கு சிங்கப்பூர் துணைப் பிரதமர்கள் வாழ்த்து

1 mins read
6b408883-76b4-4ed2-b367-8ed44ef89ea5
-

சிங்­கப்­பூர் துணைப் பிர­த­மர்­கள் லாரன்ஸ் வோங், ஹெங் சுவீ கியட் இரு­வ­ரும் மலே­சி­யா­வின் புதிய துணைப் பிர­த­மர்­க­ளா­கப் பொறுப்­பேற்­றுக்­கொண்­டுள்ள அக­மது ஸாகித் ஹமிடி, ஃபடில்லா யூசுஃப் இரு­வ­ருக்­கும் வாழ்த்­துக் கடி­தங்­களை அனுப்­பி­யுள்­ள­னர்.

மலே­சி­யத் துணைப் பிர­த­மர்­களை விரை­வில் சந்­திக்க திரு வோங்­கும் திரு ஹெங்­கும் நேற்று அனுப்­பிய கடி­தங்­களில் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ள­னர்.

திரு ஸாகித் துணைப் பிர­த­ம­ராகவும் கிரா­மப்­புற, வட்­டார மேம்­பாட்டு அமைச்­ச­ரா­க­வும் நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­ப­தற்கு அவர்­கள் வாழ்த்து தெரி­வித்­த­னர்.

தொடர்ந்து ஏழா­வது முறை­யாக திரு ஸாகித் வெற்­றி­பெற்­றுள்­ளது தொகு­திக்கு அவர் ஆற்­றிய சேவைக்­கும் பொறுப்­பு­களை அவர் சிறப்­பா­கக் கையாள்­வார் என்­ப­தற்கும் சாட்சி என்று திரு வோங் கூறி­னார். இவ்­வெற்றி மக்­கள் அவர்­மீது கொண்­டுள்ள நம்­பிக்­கை­யைக் காட்­டு­வ­தா­கத் திரு ஹெங் சொன்­னார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யி­லான ஆழ­மான உற­வைச் சுட்­டிய இரு துணைப் பிர­த­மர்­களும் கொவிட்-19 கால­கட்­டத்­தில் இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பை நினை­வு­கூர்ந்­த­னர்.

எப்­போ­தும்­போ­லவே பொது­வான சவால்­க­ளைச் சமா­ளிப்­ப­தில் இரு நாடு­களும் அணுக்­க­மான ஒத்­து­ழைப்­பைத் தொட­ரும் என்று நம்­பு­வ­தா­கத் திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

வருங்­கா­லத்­தில் ஒத்­து­ழைப்­புக்­கான புதிய வாய்ப்­பு­கள் குறித்து ஆரா­யத் திரு வோங் நம்­பிக்கை தெரி­வித்­தார்.