கேலாங் உணவகத்தில் மோதிய டாக்சி; மருத்துவமனையில் கடைப் பணியாளர்

கேலாங் உணவகத்தில் மோதிய டாக்சி; மருத்துவமனையில் கடைப் பணியாளர்

1 mins read
438fdd9e-5e7e-4190-9e55-fc2cb4c64430
-

கேலாங்கின் பவிலியன் ஸ்குவேர் வட்டார உணவகத்தில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் டாக்சி ஒன்று மோதியதில் கடையில் பணியாற்றியவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

32 வயதான அந்த ஆடவர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. காரை ஓட்டிய 43 வயது ஆடவர் மது அருந்திய சந்தேகத்தின் பேரிலும் கவனமின்றி வாகனமோட்டி காயம் விளைவித்ததன் தொடர்பிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.