தெங்கா கொண்டோமினிய கட்டுமானத் தள விபத்து தொடர்பாக ஒருவர் கைது

தெங்கா கொண்டோமினிய கட்டுமானத் தள விபத்து தொடர்பாக ஒருவர் கைது

1 mins read
11a64ba5-f84a-4e71-9c77-4b37a03d0c08
-

தெங்கா கொண்­டோ­மி­னிய கட்­டு­மா­னத் தளத்­தில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரும்­புக் கம்­பி­களை வாக­னத்­தில் இருந்து இறக்­கும்­போது நடந்த விபத்­தில் 32 வயது ஊழி­யர் ஒரு­வர் மாண்­டார்.

வாக­னத்­தில் இருந்து இரும்­புக் கம்­பி­களை இறக்­கும்­போது முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யின்றி கவ­னக்குறை­வாக நடந்­து­கொண்டதாக சந்தேகத்தின்பேரில் 45 வயது ஆட­வர் ஒரு­வரை காவல்­துறை கைது­செய்­துள்­ளது.

இது இந்த ஆண்­டின் 44வது வேலை­யிட மர­ணம். கடந்த 2021ஆம் ஆண்­டில் 37 வேலை­யிட மர­ணங்­கள் ஏற்­பட்­டுள்­ளன. 2016ஆம் ஆண்­டில்­தான் ஆக அதி­க­மாக 66 வேலை­யிட மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மாலை 4.35 மணிக்கு இந்த விபத்து குறித்த தக­வல் தங்­க­ளுக்­குக் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யும் காவல்­து­றை­யும் தெரி­வித்­தன. இந்த விபத்­தில், இரும்­புக் கம்­பி­களை கன­ரக வாக­னத்­தில் இருந்து இறக்­கும்­போது பாரந்­தூக்­கி­யின் ஒரு பகுதி கழன்று இந்­திய ஊழியர் மீது விழுந்­தது என்­றும் சம்­பவ இடத்­தி­லேயே அவர் இறந்து­விட்­ட­தாகவும் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்புத் துணை மருத்­துவ ஊழி­யர்­கள் தெரி­வித்­த­தாக மனி­த­வள அமைச்சு தெரி­வித்­தது.

விபத்து குறித்து அதி­கா­ரி­கள், கைது­செய்­யப்­பட்ட 45 வயது ஆட­வ­ரி­டம் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர். இவ்­வே­ளை­யில், அந்­தக் கட்­டுமானத் தளத்­தில் பாரந்­தூக்கி, கன­ரக வாகன பாரந்­தூக்­கி­க­ளின் செயல்­பா­டு­களை நிறுத்­தி­வைக்­கு­மாறு மனி­த­வள அமைச்சு ஹோ ஹப் கட்­டு­மான நிறு­வ­னத்­திற்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது. கன­மான பொருள்­க­ளைக் கையா­ளும்­போது அதற்­குக் கீழே ஊழி­யர்­கள் நிற்­கக்­கூ­டாது. கண்­டிப்­பா­கப் பாது­காப்பு விதி­மு­றை­க­ளைக் கடைப்­பிடிக்க வேண்­டும் என்று அமைச்சு கேட்­டுக்கொண்­டது.