இனரீதியான குற்றச்சாட்டுகளில் இருந்து பெண் விடுவிப்பு

இனரீதியான குற்றச்சாட்டுகளில் இருந்து பெண் விடுவிப்பு

1 mins read
d7b81310-ca67-43cc-9474-e90685ea908b
-

இன­உ­ணர்­வு­க­ளைப் புண்­ப­டுத்­தும் வகை­யில் பேசிய பெண், மருட்சிக்கோளாறு நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர் என்­பது ஆய்­வில் தெரி­ய­வந்­த­தால் அவர் மீதான மூன்று குற்­றச்­சாட்­டு­களும் மீட்­டுக்­கொள்­ளப்­பட்­டன.

"59 வய­தா­கும் குமாரி டான் பியோவ் ஹியோங்­கின் நோயே அவ­ரின் இந்­தச் செய­லுக்கு முக்­கிய கார­ணம். எனவே அவ­ருக்­குக் கடு­மை­யான எச்­ச­ரிக்கை விடுக்க இந்த வழக்­கில் முடி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது என்று தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸின் கேள்­வி­க­ளுக்கு நேற்று பதி­ல­ளிக்­கும் வகை­யில், தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கம் தெரி­வித்­தது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடந்த வழக்­குக்கு முந்­தைய விசா­ர­ணை­யில் அவரை நீதி­மன்­றம் இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடு­வித்­தது.

மருட்­சிக் கோளாறு நோய்­தான் திரு­மதி டான், இது­போன்ற தவ­றான கருத்­து­களை வெளி­யி­டக் கார­ணம் என்­றும் அவர் தனது உடல்­நிலை பற்­றி­ அறிந்­தி­ருக்­க­வில்லை என்­றும் அந்த அலு­வ­ல­கம் தெரி­வித்­தது.

குமாரி டான் ஏற்­கெ­னவே இரண்டு வாரங்­கள் தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­தார்.