சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அனைத்துலக மாநாடு சிங்கப்பூரில் நடைபெறுகிறது

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அனைத்துலக மாநாடு சிங்கப்பூரில் நடைபெறுகிறது

2 mins read
097e0d3f-9a6b-4f2f-bdd6-fec66f8e7c42
-

சிங்­கப்­பூரை பசுமை சுற்­று­லாத் தல­மாக்­கும் முயற்­சிக்கு உறு­து­ணை­யாக, முதல்­மு­றை­யாக பரு­வ­நிலை மாற்­றத்­துக்கு எதி­ரான உலக பய­ணத்­துறை மன்­றம் தனது அனைத்­து­லக மாநாட்டை 2024 நவம்­ப­ரில் இங்கு நடத்­த­வுள்­ளது.

சுற்­றுச்­சூ­ழ­லைப் பாது­காக்­கும் முக்­கிய நிகழ்ச்­சி­களை நடத்­தும் சிங்­கப்­பூ­ரின் முயற்­சி­க­ளுக்கு கிடைத்­துள்ள மற்­றோர் அங்­கீ­கா­ர­மாக இது கரு­தப்­ப­டு­கிறது.

சுற்­றுச்­சூ­ழ­லைப் பேணும் சிங்­கப்­பூ­ரின் முயற்­சி­களை பிர­ப­லப்­படுத்­தும் சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கத்­தின் உத்­தி­பூர்­வத் திட்­டங்­களில் ஒன்­றாக இது இடம்­பெ­று­கிறது.

அனைத்­து­லக மாநாடு 2024 நவம்­பர் 13 முதல் 15 வரை நடை­பெ­றும். சுற்­றுச்­சூ­ழ­லுக்­குப் பாதிப்­பில்­லாத சுற்­றுலா, பய­ணத்­து­றை­களுக்­கான உல­கத் தர­நி­லையை இந்த மன்­றம் நிர்­வ­கிக்­கிறது.

ஸ்பெ­யி­னின் செவில் நக­ரில் நடை­பெற்ற இந்த ஆண்­டின் அனைத்­து­லக மாநாடு நேற்று நிறை­வ­டைந்­தது.

"2024 அனைத்­து­லக மாநாட்டை சிங்­கப்­பூ­ரில் நடத்­தும் மன்­றத்­தின் முடிவு, சுற்­றுச்­சூ­ழல் நிலைத்­தன்­மை­யைப் பேணு­வதை இலக்­கா­கக் கொண்டு தர­மான நிகழ்ச்­சி­களை நடத்­து­வ­தற்­கான அனைத்­து­லக-ஆசிய முனை­ய­மாக சிங்­கப்­பூர் வளர்ந்து வரு­வ­தைப் பிர­தி­ப­லிக்­கிறது," என்று சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கத்­தின் டாக்­டர் எட்­வர்ட் கோ கூறி­னார். கழ­கத்­தின் மாநா­டு­கள், கூட்­டங்­கள், சுற்­று­லாக்­க­ளுக்­கான நிர்­வாக இயக்­கு­நர் இவர்.

"நீடித்த நிலைத்­தன்­மை­யைப் பேணு­வது சிங்­கப்­பூ­ருக்­கும் பய­ணத் துறைக்­கும் தேசிய முன்­னு­ரி­மை­யாக உள்­ளது. உல­க­ள­வில் பிர­ப­ல­மான பய­ணத்­து­றைப் பங்­கா­ளி­கள் சிங்­கப்­பூ­ரில் கூடி, புதிய பங்­கா­ளித்­து­வங்­களை மேற்­கொள்­வ­து­டன் நீடித்த நிலைத்­தன்மை குறித்த முக்­கிய விஷ­யங்­கள் குறித்­துப் பேசப்­போ­வது எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது," என்­றார் அவர்.

முன்­ன­தாக டிசம்­ப­ரில், சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கத்­தின் 'மைஸ்' நீடித்த நிலைத்­தன்­மைக் குழு­வும் சிங்­கப்­பூர் மாநாடு, கண்­காட்சி அமைப்­பா­ளர்­கள், விநி­யோ­கிப்­பா­ளர்­க­ளின் சிங்­கப்­பூர் சங்­க­மும் நீடித்த நிலைத்­தன்­மை­யைப் பேணும் நிகழ்ச்­சி­க­ளுக்­கான செயல் திட்­டத்தை வெளி­யிட்­டன.

'கிளீன்­என்­விரோ' சிங்­கப்­பூர் உச்­ச­நிலை மாநாடு, உலக நக­ரங்­க­ளின் உச்­ச­நிலை மாநாடு உள்­பட குறைந்­தது ஆறு குறிப்­பி­டத்­தக்க சுற்­றுச்­சூ­ழல் நிலைத்­தன்­மை­யைப் பேணும் மாநா­டு­களை சிங்­கப்­பூர் இந்த ஆண்டு நடத்­தி­யுள்­ளது.

பரு­வ­நிலை மாற்­றத்­துக்கு எதிரான உலக பய­ணத்­துறை மன்றத்­தின் அனைத்­து­லக மாநாட்டு­டன், ஆசிய பரு­வ­நிலை கருத்­தரங்கம் உள்­ளிட்ட குறைந்­தது ஐந்து நிகழ்வுகள் சிங்­கப்­பூ­ரில் அடுத்த ஆண்­டும் அதற்­குப் பின்­ன­ரும் நடை­பெ­று­வது உறு­தி­யாகி உள்­ளது.