அஞ்சல் பொட்டல விநியோக மோசடியில் கடந்த இரண்டு வாரங்களில் 130 பேர் ஏறக்குறைய $182,000 இழந்துள்ளனர்.
பண்டிகைக் காலத்தில் இத்தகைய மோசடிச் சம்பவங்கள் மீண்டும் தலையெடுப்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி காவல்துறை நேற்று ஆலோசனை வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சல் பொட்டலங்கள் அனுப்பப்பட்டிருப்பதாகவோ செலுத்தவேண்டிய தொகை பாக்கி இருப்பதாகவோ மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
கூடுதல் விவரங்களை அறிந்துகொள்வதற்கான இணைப்பு அதில் தரப்பட்டது.
அதன் மூலம் கடன்பற்று அட்டை அல்லது வங்கி அட்டை விவரங்கள், மறைச்சொற்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டன.
தங்கள் அனுமதியின்றி பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதை அறிந்த பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர்கள் அறிந்துகொண்டனர்.

