மகளை மானபங்கப்படுத்திய தந்தை; ஏறக்குறைய ஐந்தாண்டுச் சிறை

மகளை மானபங்கப்படுத்திய தந்தை; ஏறக்குறைய ஐந்தாண்டுச் சிறை

1 mins read
59d6446d-490c-472d-882f-76d54c628389
-

பெற்ற மகளை மான­பங்­கப்­ப­டுத்­திய தந்­தைக்கு நேற்று, நான்கு ஆண்­டு­கள், 10 மாதங்­கள், நான்கு வாரங்­க­ள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 2011க்கும் 2017ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் இவர் இவ்­வாறு மான­பங்க நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டார். மக­ளுக்கு ஒன்­பது வய­தா­ன­தி­லி­ருந்து இவர் இவ்­வாறு நடந்­து­கொண்­டார்.

மான­பங்­கக் குற்­றச்­சாட்டு தொடர்­பில் விசா­ர­ணை­யை கோரிய ஆட­வர் நீதி­மன்­றத்­தில் தனது மகளை அவ­ம­திக்­கும் வகை­யில் அவ­ருக்­குப் பாலி­யல் ரீதி­யாக ஒழுங்­கற்ற தொடர்­பு­கள் இருந்­த­தா­க­வும் அதன் விளை­வா­கவே தந்­தை­மீது குற்­றம் சாட்­டு­வ­தா­க­வும் குறை­கூ­றி­னார்.

அன்­பை­யும் பாது­காப்­பை­யும் வழங்­க­வேண்­டி­ய­வரே தகாத முறை­யில் நடந்­து­கொள்­வ­தற்கு எந்­தக் குழந்­தை­யும் பலி­யா­கக்­கூ­டாது என்று அர­சாங்க வழக்­க­றி­ஞர் எடுத்­துக்­கூ­றி­னார். நீதி­மன்­றத் தீர்ப்­பை­யும் தண்­ட­னை­யை­யும் எதிர்த்து மேல்­மு­றை­யீடு செய்­ய­வி­ருப்­ப­தா­கக் கூறப்­பட்­டது. தற்­போது அவர் $20,000 பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்.