கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு முந்தைய நாள்களில் பேருந்து, ரயில் சேவை நீட்டிப்பு

கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு முந்தைய நாள்களில் பேருந்து, ரயில் சேவை நீட்டிப்பு

2 mins read
a02e34b8-3771-4837-acdf-6b4ec80cebb8
-

கிறிஸ்துமஸ், புத்­தாண்டு ஆகி­ய­வற்­றின் முந்­தைய நாள்­களில் பேருந்து, ரயில் சேவை­கள் நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

கொண்­டாட்­டக் களிப்­பில் திளைத்­தி­ருக்­கும் பய­ணி­கள் சற்று தாம­த­மாக இல்­லம் திரும்­பு­வ­தற்கு ஏது­வாக இந்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது என்று பொதுப் போக்கு­வ­ரத்து நிறு­வ­னங்­கள் தெரி­வித்­துள்­ளன.

டௌன்­ட­வுன் பாதை­யி­லும் வட­கி­ழக்கு பாதை­யி­லும் ரயில் சேவை­கள் டிசம்­பர் 24ஆம் தேதி­யன்று ஒன்­றரை மணி­நே­ர­மும் டிசம்­பர் 31ஆம் தேதி­யன்று இரண்­டரை மணி­நே­ர­மும் நீட்­டிக்­கப்­படும் என்று எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நேற்று தெரி­வித்­தது.

கடைசி வட­கி­ழக்கு ரயில்­கள் நகர மத்­தி­யின் நிலை­யங்­க­ளுக்கு வந்து சேர்ந்­த­வு­டன் செங்­காங்-பொங்­கோல் எல்­ஆர்டி ரயில்­கள் தனது கடைசி ரயில் சேவை­களை நடத்­தும்.

வட­கி­ழக்கு, டௌன்­ட­வுன் ஆகிய பாதை­களில் நீட்­டிக்­கப்­பட்ட ரயில் சேவை­கள் பற்­றிய மேல் விவ­ரங்­க­ளுக்கு எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வ­னத்­தின் https://www.sbstransit.com.sg இணை­யப் பக்­கத்தை நாட­லாம்.

வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்­டப்­பாதை, தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை­களில் ஓடும் ரயில்­க­ளின் சேவை­களும் நீட்­டிக்­கப்­படும் என்று எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் இம்மாதம் 9ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

இது குறித்த மேல் விவ­ரங்­களுக்கு எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னத்­தின் www.smrt.com.sg இணை­யப் பக்­கத்தை நாட­லாம்.

ரயில் சேவை­க­ளின் நேரம் நீட்­டிக்­கப்­படும் வேளை­யில், எஸ்­பி­எஸ் டிரான்­சிட்­டின் 24 பேருந்­து­களின் சேவை நேரங்­களும் நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

அவை 60A, 63M, 114A, 181, 222, 225G, 228, 229, 232, 238, 240, 241, 243G, 261, 269, 291, 292, 293, 315, 325, 410W, 804, 812, 974A ஆகி­யவை.

எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னத்­தின் 13 பேருந்து சேவை­க­ளான 300, 301, 302, 307, 901, 911, 912A, 912B, 913, 920, 922, 973A, 983A ஆகி­ய­வற்­றின் நேரங்­களும் நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளன.