22வது மாடியிலிருந்து வீசப்பட்ட பூனை

22வது மாடியிலிருந்து வீசப்பட்ட பூனை

2 mins read
6caa777f-244c-4d83-a713-06497a5003ad
-
multi-img1 of 2

பூன் லே வட்­டா­ரத்­தில் உள்ள வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கக் கட்­ட­டத்­தின் 22வது மாடி­யி­லி­ருந்து சிறு­வன் ஒரு­வன் பூனையை வீசு­வ­தைக் காட்­டும் காணொளி சமூக வலைத்­த­ளங்­களில் வலம் வந்­ததை அடுத்து, அது­கு­றித்து விலங்கு மருத்­து­வச் சேவை

விசா­ரணை நடத்தி வரு­கிறது.

"இந்த விவ­கா­ரம் குறித்து விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது. அதற்கு முன் வெறும் ஊக அடிப்­ப­டை­யில் வதந்­தி­க­ளைப் பரப்ப வேண்­டாம். முறை­யான விசா­ரணை நடக்க வேண்­டும்," என்று விலங்கு மருத்­து­வச் சேவை­யின் குழும இயக்­கு­நர் ஜெசிக்கா குவோக் தெரி­வித்­தார்.

மின்­தூக்கி கதவு திறந்­த­தும் அதி­லி­ருந்து ஒரு கறுப்­புப் பூனை வெளி வரு­வ­தை­யும் அதைத் தொடர்ந்து அந்­தச் சிறு­வன் வெளி­வ­ரு­வ­தை­யும் அந்த ஒரு நிமிட காணொளி காட்­டி­யது.

சில வினா­டி­கள் கழித்து, அச்­சி­று­வன் அந்­தப் பூனை­யைத் தூக்கி 22வது மாடி­யி­லி­ருந்து கீழே வீசு­வ­தைக் காணொ­ளி­யில் பார்க்க முடிந்தது.

சிறிது நேரம் கழித்து, பெரும் சத்­தம் ஒன்று காணொ­ளி­யில் கேட்க முடிந்­தது.

இந்த விவ­கா­ரம் குறித்து புகார் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக காவல்­துறை உறுதி செய்­துள்­ளது.

சம்­பந்­தப்­பட்ட சிறு­வனைக் காவல்­து­றை­யி­னர் கைது

செய்­யயவோ தடுத்து வைக்­க­வோ இல்லை என்­றும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறி­யது.

தேசிய பூங்­காக் கழ­­கத்­தின் ஒரு பகு­தி­யான விலங்கு மருத்­து­வச் சேவை, செல்­லப் பிரா­ணி­கள் கொடு­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வதை ஒரு­போதும் சகித்­துக்­கொள்­ளாது என்று திரு­வாட்டி குவோக் தெரி­வித்­தார்.

விலங்கு துன்­பு­றுத்­தல் குற்­றத்தை முதல்­முறை புரி­ப­வர்­

க­ளுக்கு 18 மாதங்­கள் வரையிலான சிறைத் தண்­டனை, $15,000 வரை அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.