குடலை உருவிடுவேன்; தாயை மிரட்டிய மகன்

குடலை உருவிடுவேன்; தாயை மிரட்டிய மகன்

1 mins read
cdd99e00-9a5c-4de6-8a2f-554292c6245e
-

தமது 19 வயது மகன் தம்­மைத் துன்­பு­றுத்­தி­யதை அடுத்து, 44 வயது பெண் ஒரு­வர் சட்ட ரீதி­யா­கப் பாது­காப்பு கோரி­னார். அதை­ய­டுத்து, அவ­ருக்கு எதி­ராக வன்­மு­றைச் செயல்­களில் இறங்­கக்­கூ­டாது என்று அந்த இளை­ஞ­னுக்கு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

ஆனால் அந்த உத்­த­ரவை நெய்­தன் சுபாஷ் புறக்­க­ணித்­தார்.

"உன் குடலை உரு­வி­டு­வேன். கழுத்தை அறுத்­து­வி­டு­வேன், உன்னை அறை­வேன்," என்று கடந்த மாதம் 9ஆம் தேதி­யன்று நெய்­தன் தமது தாயாரை மிரட்­டி­னான்.

நெய்­தன் தற்­போது விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார். தம்­மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களை அவர் ஒப்­புக்­கொண்­டார். கடந்த அக்­டோ­பர் மாதம் 24ஆம் தேதி மாலை 5 மணி அள­வில் செங்­காங் வட்­டா­ரத்­தில் உள்ள தமது வீட்­டில் திசுத்­தாள் பெட்­டி­யைத் தமது தாயார் மீது நெய்­தான் எறிந்­தான்.

கூர்­மை­யான பொருள் ஒன்­றைப் பயன்­ப­டுத்தி தமது தாயா­ரின் உட­லெங்­கும் தொடர்ந்து பல­முறை நெய்­தன் குத்­தி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில் அக்­டோ­பர் மாத இறு­தி­யில் நெய்­த­னுக்­கும் அவ­னது தாயா­ருக்­கும் இடையே வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. அப்­போது தமது தாயா­ருக்கு நெய்­தன் கொலை மிரட்­டல் விடுத்­த­தாக அறி­யப்­ப­டு­கிறது.

தமது தண்டனைக் குறைப்பு வாதத்தைப் பதிவு செய்ய நெய்­த­னி­டம் நீதி­மன்­றம் கேட்­ட­போது அவன் எது­வும் கூற­வில்லை. இதை­ய­டுத்து, நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்­புக்­கும் சீர்­தி­ருத்­தப் பயிற்­சிக்­கும் நெய்­தன் பொருத்­த­மா­ன­வர்தானா என்­ப­தைக் கண்­டு­பி­டிக்க நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. இந்த வழக்கு தொடர்­பாக அடுத்த மாதம் 16ஆம் தேதி­யன்று தீர்ப்­ப­ளிக்­கப்­படும்.