தொடர்ந்து மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்படுகிறது

தொடர்ந்து மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்படுகிறது

1 mins read
10915d3b-188f-4837-af99-839fd3336e26
-

இம்­மா­தம் எஞ்­சி­யுள்ள நாள்­களில் மழை தொடர்ந்து பெய்­யும் என்று தேசிய சுற்றுப்புற வாரியத்தின் வானிலைச் சேவை முன்­னு­ரைத்­துள்­ளது.

பிற்­ப­கல் நேரங்­களில் மித­மான அள­வி­லி­ருந்து கன­மழை வரை பெய்­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சில நாள்களில் வெப்­ப­நிலை ஏறத்­தாழ 23 டிகிரி செல்­சி­ய­ஸ் ஆகப் பதி­வா­கக்­கூ­டும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

வட­கி­ழக்கு பரு­வ­ம­ழைக்­கா­லம் கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் மழை பெய்து வரு­கிறது. இந்த மழைக்­கா­லம் அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் வரை தொட­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அடுத்த இரண்டு வாரங்களில் ஒருசில நாள்களில் பிற்பகலில் பெய்யும் மழை காலை நேரத்திலும் தொடரும் என்று வானிலை மையம் கூறியது. வட திசையிலிருந்து வீசும் பலத்த காற்று காரணமாக இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குப் பலத்த காற்றுடன் மழையும் பெய்யக்கூடும் என்று வானிலைச் சேவை தெரிவித்தது.

பெரும்பாலான நாள்களில் வெப்பநிலை 24லிருந்து 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று முன்னுரைக்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்திலும் மார்ச் மாதம் முதல் பகுதியிலும் மழை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.