உலகப் பொருளியல் 2023: ஏற்ற இறக்கமாகவே இருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன

உலகப் பொருளியல் 2023: ஏற்ற இறக்கமாகவே இருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன

4 mins read
fba3a600-bbc7-4609-8c0c-a57ed1c26db4
-

ஒன்­றைக் கணித்­துச் சொல்­வது என்பது சிர­ம­மா­ன­து­தான். அது­வும் பொரு­ளி­யல் நில­வ­ரங்­களைக் கணித்­துச் சொல்­வது என்­பது இன்­னும் சிர­ம­மா­னது. பொருளி யல் வல்­லு­நர்­கள் மூன்று பேருக்கு இடையே ஒரு விவா­தம் நடந்­தது.

ஐந்து வித­மான கருத்­து­கள் முன்­வைக்­கப்­பட்­டன. பொரு­ளி­யல் மந்­தம் ஏற்­ப­ட­லாம், சீனா­வின் கொவிட்-19 தொல்­லை­கள், எண்­ணெய் விலை பிரச்சி­னை­கள், மின்­னி­லக்க நாணய கோளா­று­கள் ஆகி­யவை 2023 பொருளியல் வளர்ச்­சி­யில் தாக்­கத்தை ஏற்­படுத்­தக்­கூ­டிய சில அம்­சங்­கள் என்பது தெரி­ய­வந்துள்ளது.

பொரு­ளி­யல் மந்தம் பற்றிய கருத்துப் பரிமாற்றத்தைப் பார்க்கும்போது, அடுத்த ஆண்­டில் ஏறக்­கு­றைய எங்குமே பொருளி­யல் வளர்ச்சி மெது­வ­டை­யும் என்­று­தான் பெரும்­பா­லான பொரு­ளியல் வல்­லு­நர்­கள் ஒப்­புக்­கொள்­கி­றார்­கள்.

அடுத்த ஆண்டு பொரு­ளி­யல் வளர்ச்சி 2.7% ஆக இருக்­கும் என்று அனைத்­து­லக பண நிதி­யம் கூறு­கிறது.

என்­றா­லும்­கூட மந்­தத்­தைப் பொறுத்­த­வரை ஐரோப்­பிய ஒன்­றி­யம் பொரு­ளி­யல் மந்­தம் சாத்­தி­யம் என்­கிறது. அதே­வேளையில், அமெ­ரிக்­கா­வில் இடம்­பெ­றக்­கூ­டிய நில­வ­ரங்­க­ளைப் பொறுத்தே உல­கப் பொரு­ளி­யல் மந்­தம் இருக்­கும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

பொரு­ளி­யல் மந்­தத்­தைத் தவிர்த்­து­வி­ட­லாம் என்று நம்­பிக்­கை­யாளர்­கள் நினைக் கிறார்­கள். இவர்­கள் பொரு­ளி­யல் வல்­லு­நர்­களில் குறை­ந்த எண்ணிக்கையில் இருக்­கி­றார்­கள். அதே­வே­ளை­யில், பெரும்­பா­லா­ன­வர்­கள் பொரு­ளி­யல் மந்­தம் இருக்கும் என்­கி­றார்­கள்.

கேபி­எம்ஜி நிறு­வ­னம் நடத்­திய ஆய்வு ஒன்­றில் 86% தலைமை நிர்­வாக அதி­காரி­கள் இப்­ப­டி­தான் கூறு­கி­றார்­கள். இருந்­தா­லும் அவர்­களில் 60 விழுக்­காட்­டி­னர் மந்­தம் கொஞ்ச காலத்­திற்கு, குறைந்த அள­வில்­தான் இருக்­கும் என்­கி­றார்­கள்.

பொரு­ளி­யல் கணிப்­பா­ளர்­களில் மூன்றில் இரு பங்­கி­னர் அடுத்த ஆண்டு பொரு­ளி­யல் மந்­தத்தை எதிர்­பார்ப்­ப­தாக தி வால் ஸ்தி­ரீட் ஜெர்­னல் கூறு­கிறது.

உல­கப் பொரு­ளி­யல் கணிப்பு பற்றி அக்­டோ­பர் மாதம் அனைத்­து­லக பண நிதி­யம் ஓர் எச்­ச­ரிக்கை விடுத்­தது.

மோசமான காலம் இனி­தான் வரப்­போகிறது. பெரும்­பா­லான மக்­க­ளைப் பொறுத்­த­வரை 2023ல் பொரு­ளி­யல் மந்­தத்­தைப் போல­ உணர்­வார்­கள் என்று அது தெரிவித்தது. வளர்ச்சி குறை­யும், பொருள்­களின் விலை­யும் குறை­யும் என்­ப­தால் அடுத்த ஆண்டு பண­வீக்­கம் குறை­யும் என்று பெரும்­பா­லான பொரு­ளி­யல் வல்லுநர்­கள் எதிர்­பார்க்­கி­றார்­கள்.

இருந்­தா­லும்­கூட பொருள், சேவை விநியோ­கத்­தில் ஏற்­படக்­கூ­டிய இடை­யூறு­கள் கார­ண­மாக பண­வீக்­கம் அதி­க­மாக இருக்­க­லாம் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

வர்த்­தக தன்­னைப்­பே­ணித்­தனம், கொவிட்-19 தலை­தூக்­கு­வது முத­லா­னவை இத்தகைய இடை­யூ­று­களில் அடங்­கும்.

சீனா­வில் அடுத்த ஆண்­டில் நில­வக்­கூ­டிய சூழ்­நி­லை­கள் பற்றி பல்­வேறு யூகங்­கள் இடம்­பெ­று­கின்­றன. சீனப் பொரு­ளியல் 2022ல் 3% கூட வள­ராது என்று பல­ரும் கணிக்­கி­றார்­கள். அந்த வளர்ச்சி 2023ல் 4% முதல் 5% ஆக இருக்­கும் என்­றும் கணிக்­கப்­ப­டு­கிறது.

கொவிட்-19 கிருமி அறவே இல்­லாத கொள்­கையைக் கடைப்­பி­டித்து வந்த சீனா திடீ­ரென மாறி இருக்­கிறது.

இத­னா­லும் ஆபத்து தலை­தூக்­கக்­கூடிய வாய்ப்பு இருக்­கிறது. கட்­டுப்­பா­டு­கள் தளர்­வதால் தொற்று கூட­லாம். சீனா­வில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட முதி­ய­வர்­க­ளின் எண்­ணிக்­கையும் குறைவு.

அப்­படி தொற்று கூடி­னால் அதைக் கட்டுப்­பா­டு­க­ளு­டன் சீனா திறம்­பட கையாளும் பட்­சத்­தில் 2023 இரண்­டாம் பாதி­யில் சீனப் பொரு­ளி­யல் சூடு­பி­டிக்­கும் வாய்ப்பு இருக்­கிறது. இப்­படி நடந்தால், பொருள்­களின் விலை­களும் பண­வீக்­கமும் கூடினாலும்­கூட சீன வளர்ச்சியால் உலகப் பொரு­ளி­ய­லுக்கு ஊக்­க­சக்தி கிடைக்­கும்.

எண்­ணெய் விலை அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­கப்­படும் மற்­றோர் அம்­சம். எண்­ணெய் விலை இப்­போது ஒரு பீப்­பாய் US$80க்கு விற்­கப்­ப­டு­கிறது.

ரஷ்யா ஏற்­று­மதி செய்­யும் எண்­ணெய்க்கு ஒரு பீப்­பாய் US$60 என்ற வரம்பை இந்த ஆண்டு டிசம்­பர் மாதம் ஜி7 நாடு­கள் விதித்­தன. இன்­ன­மும் ரஷ்ய எண்­ணெய்யை கொள்­மு­தல் செய்­யும் சீனா, இந்­தியா உள்ளிட்ட இதர நாடு­கள் மேலும் தள்ளுபடி விலை­யில் எண்­ணெய்­யைப் பெற பேச்­சு­வார்த்தை நடத்தி அதன்­ மூ­லம் எண்ணெய் விலை குறைந்­தால், உல­க­ள­வில் மந்­தம் உறு­திப்­ப­டக்­கூ­டிய நிலை ஏற்­ப­ட­லாம்.

எல்­லா­வற்­றை­யும் சீர்­தூக்­கிப் பார்க்கை யில், இப்­போ­தைய விலையைவிட அடுத்த ஆண்­டில் எண்­ணெய் விலை அதி­க­மாகத்தான் இருக்­கும் என்­று­தான் பெரும்­பா­லா­ன­வர்­கள் கணிக்­கி­றார்­கள்.

மின்­னி­லக்க நாண­யச் சொத்­து­கள் பெரும் அடி­வாங்கி இருக்­கின்­றன. 2021ல் US$2.8 டிரில்­லி­யன் அள­வுக்கு இருந்த அந்­தச் சொத்­து­கள், 2022 டிசம்­பர் 10 நில­வ­ரப்­படி ஏறக்­கு­றைய 70% குறைந்து US$860 பில்­லி­ய­னுக்கு இறங்­கி­விட்­டன.

இந்த மின்­னி­லக்க நாணய நில­வ­ரம் நீடிக்­கும் என்றே கண்­கா­ணிப்­பா­ளர்­கள் பல­ரும் எதிர்­பார்க்­கி­றார்­கள்.

அதே­வே­ளை­யில், இந்­தத் துறை­யில் சரி­யில்­லாத தரப்­பு­கள் தடு­மாறி இருப்­பது நல்ல ஆரோக்­கி­ய­மான மேம்­பா­டு­தான் என்று கூறு­வோ­ரும் உள்ளனர்.

மின்­னி­லக்க நாணய தொழில்­துறை 2023ல் சிர­ம­மான பாதை­யில்­தான் தொடர்ந்து செல்­லும் என்று நம்புவதற் கான வாய்ப்­பு­கள் தெரி­கின்­றன.

கடை­சி­யா­கப் பார்க்­கை­யில், பல கணிப்­பு­க­ளை­யும் பொய்­யாக்­கி­வி­டக்­கூ­டிய ஓர் அம்­ச­மும் இருக்­கிறது.

சீனாவில் கொவிட்-19 தொற்று கார­ண­மாக ஏற்­ப­டக்­கூ­டிய சுகா­தார நெருக்­க­டி­கள் எதிர்­பார்க்­கப்­பட்­ட­தை­விட மோச­மா­கப் போனால், கணிப்­பு­கள் எல்­லாம் தவ­றி­வி­டும் என்று வல்­லு­நர்­கள் கூறு­கி­றார்­கள்.

நேட்டோ நேர­டி­யாக தலை­யி­டும் பட்­சத்­தில் ரஷ்யா-உக்­ரேன் போர் தீவிர­மடை­யும் என்று டாக்­டர் ரூபினி என்ற வல்­லு­நர் எச்­ச­ரிக்­கி­றார். இத­னால் பல தொடர் விளை­வு­கள் ஏற்­ப­டக்­கூ­டும் என்றும் அவர் எச்­சரிக்கிறார்.

அனைத்­து­லக பண நிதி­யத்­தின் ஐரோப்­பிய பிரிவு இயக்­கு­நர் ஆல்­ஃபிரட் காமர், ஐரோப்­பா­வி­லும் அமெ­ரிக்­கா­விலும் அதிக சம்­பள உயர்வு இடம்­பெறலாம் என்று கணிக்­கி­றார்.

இத்­த­கைய கணிப்­பு­கள் எப்­படி போனா­லும் சரி, பொரு­ளி­யல் மற்றும் நிதிச் சந்­தை­க­ளைப் பொறுத்­த­வரை 2023 ஏற்ற, இறக்­க­மான ஓர் ஆண்டாகவே இருக்கும் என்பதற்கான அறிகுறி­களே தெரி­கின்­றன.

சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு