காற்று போகாத பிளாஸ்டிக் போத்தல் டயர் பரிசோதனை

காற்று போகாத பிளாஸ்டிக் போத்தல் டயர் பரிசோதனை

1 mins read
ab470414-2048-4c53-8fe5-1c222efb46bd
-

மறு­சு­ழற்சி குப்பைத் தொட்­டி­களில் போடப்­படும் பிளாஸ்­டிக் போத்­தல்­க­ளைக் கொண்டு காற்று இறங்­காத வாகன டயர்­க­ளைத் தயா­ரித்து அதைப் பரி­சோ­தித்து பார்க்­கும் நடை­முறை இப்­போது சிங்­கப்­பூ­ரில் இடம்­பெ­று­கிறது.

மிச்சலின் என்ற பிரஞ்சு டயர் தயா­ரிப்பு நிறு­வ­னம், சிங்­கப்­பூ­ரில் டிஎச்­எல் எக்ஸ்­பி­ரஸ் என்ற தள­வா­டப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னத்­து­டன் சேர்ந்து அந்­தத் தொழில்­நுட்­பத்­தைப் பரி­சோ­திக்­கிறது.

பிளாஸ்­டிக் போத்­தல்­க­ளைக் கொண்டு தயா­ரிக்­கப்­படும் டயர் காற்று போகாத ஒன்று என்­ப­தால் வாகன ஓட்­டு­நர்­கள் கவ­லைப்­பட வேண்­டிய அவ­சி­யம் இருக்­காது என்று தெரி­வித்து இருக்­கும் மிச்சலின், இந்த டயர்­களை 2024 முதல் விற்­க­லாம் என்று இலக்கு நிர்­ண­யித்து இருக்­கிறது.

இதனிடையே, அந்­தப் பரி­சோ­தனை பற்றி தனக்­குத் தெரி­யும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்து உள்­ளது.

பொருத்­த­மான பாது­காப்பு நடை­மு­றை­கள் பின்­பற்­றப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் ஆணை­யம் சம்­பந்­தப்­பட்ட தரப்பு­களு­டன் செயல்­பட்டு வரு­கிறது.