வசதி குறைந்தோருக்கு மனமகிழ் அன்பளிப்பு பெட்டி விநியோகம்

வசதி குறைந்தோருக்கு மனமகிழ் அன்பளிப்பு பெட்டி விநியோகம்

1 mins read
491b399c-fe33-497f-a706-74b7147ef51a
-

தெம்­ப­னிஸ் சங்­காட் குடி­மக்­கள் ஆலோ­ச­னைக் குழு கடந்த 2020ல் நடை­மு­றைப்­ப­டுத்­திய மன­ம­கிழ் பெட்டி என்ற செயல்­திட்­டத்­தின்­கீழ் நேற்று தெம்­ப­னிஸ் செங்­காட் பகுதி­யில் ஏறத்­தாழ 400 குடும்­பங்­களுக்குத் தொண்­டூ­ழி­யர்­கள் அப் பெட்­டி­களை விநி­யோ­கித்­தனர்.

கொண்­டாட்ட விடு­முறை காலத்­தில் மகிழ்ச்­சி­யைப் பரப்­பு­வது அந்­தச் செயல்­திட்­டத்­தின் நோக்­கம்.

ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் பொருத்­த­மான முறை­யில் மன­ம­கிழ் பெட்­டி­யில் பொருள்­கள் இருக்­கும்.

குறைந்த வரு­மான குடும்­பங்­களுக்கு மட்­டு­மின்றி தாதிமை இல்லங்­களில் வசிப்­ப­வர்­கள், ஒற்றை தாய்மார்கள் ஆகி­யோ­ருக்­கும் அது வழங்­கப்­பட்­டது.

மன­ம­கிழ் அன்பளிப்புப் பெட்டி விநி­யோ­கத்­தில் வட­கி­ழக்கு மாவட்ட மேய­ரும் தெம்­ப­னிஸ் குழுத்­தொ­குதி உறுப்­பி­ன­ரு­மான டெஸ்­மண்ட் சூவும் கலந்­து­கொண்­டார்.

நேரத்­தைச் செல­விட்டு தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­படும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளை­யும் நிறு­வ­னங்­க­ளை­யும் அவர் பாராட்­டி­னார். பெர்த்­தா­பிஸ் சீர்­தி­ருத்த இல்­லம், ஊட்­ரமில் உள்ள எச்­சிஏ ஒயேசிஸ் ஆகி­ய­வற்­றில் திங்கள்கிழமை மன­ம­கிழ் பெட்­டி­கள் விநி­யோ­கிக்­கப்­படும்.