உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவும் புதிய செயல்திட்டம்

உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவும் புதிய செயல்திட்டம்

1 mins read
2d76fad3-abb2-4eb4-b003-6630d88e1752
-

நம்­பிக்கைமிக்க உள்­ளூர் நிறு­வனங்­கள், ஒரு புதிய செயல்­திட்டத்­தைப் பயன்­ப­டுத்தி, திறனார்­களை வேலை­யில் சேர்த்து, ஆற்றலைப் பெருக்கி உலக சந்தை­களில் சிறந்த முறை­யில் போட்டி போட­லாம் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பு வெள்­ளிக்­கி­ழமை 'சிங்­கப்­பூர் உலக மேலா­ளர்­கள் செயல்­திட்­டம்' என்ற அந்­தத் திட்­டத்­தைத் தொடங்­கி­யது.

உலக அள­வில் விரி­வ­டை­யக் கூடிய நோக்­கத்­துடன் இருக்­கும் உள்­ளூர் நிறு­வ­னங்­கள், தங்­கள் வளர்ச்சி நோக்­கத்தை நிறை­வேற்றும் வகை­யில் ஆற்­றல் மேம்­பாட்டை மேம்­ப­டுத்­திக்­கொள்ள உத­வு­வது அந்­தச் செயல்­திட்­டத்­தின் நோக்­கம்.

புதிய செயல்­திட்­டத்­திற்­காக இப்­போது ஆறு நிறுவனங்­கள் தேர்ந்­தெடுக்­கப்­பட்டு உள்­ளன.

அடுத்த மூன்று ஆண்­டு­களில் 20 நிறு­வ­னங்­கள் வரை அதில் சேரும்.

மனி­த­வள அமைச்­ச­ரும் வர்த்தக, தொழில் இரண்­டாம் அமைச்­ச­ரு­மான டான் சீ லெங், செயல்­திட்ட தொடக்க நிகழ்ச்சியில் கலந்­து­கொண்­டார்.

உள்­ளூ­ரில் வளர்ந்து உலக அள­வில் போட்­டி­யி­டக்­கூ­டிய மேலும் பல நிறுவனங்­களை உரு­வாக்­கு­வது நமது விருப்­பம் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

இத்­த­கைய சிங்­கப்­பூ­ரின் புதிய தலை­முறைத் தலை­வர்­கள் பொருளியலை முன்­னெ­டுத்­துச் செல்­பவர்களாக இருப்­பார்­கள் என்­றும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு மதிப்பு­மிக்க வேலை­களை உரு­வாக்­கித் தரு­பவர்களாக அவர்கள் இருப்பார்கள் என்றும் அமைச்­சர் கூறி­னார்.