திரும்பப்பெறப்படும் இரு வகை தேநீர் தயாரிப்புப் பொருள்கள்

திரும்பப்பெறப்படும் இரு வகை தேநீர் தயாரிப்புப் பொருள்கள்

1 mins read
c82951e5-b9cf-4c5e-8f1a-46ef3ddb4768
-

சீனா­வில் இருந்து 'கிரீன் ஆலிவ் குருப்' என்ற நிறு­வ­னம் இறக்­கு­மதி செய்­யும் பால்­ க­லந்த இரண்டு வகை தேநீர் தயா­ரிப்­புப் பொருள்­களில், சிங்­கப்­பூ­ரில் அனு­ம­திக்­கப்­ப­டாத ஒரு வகை ரசா­யன அமி­லம் இருப்­பது கண்டு­பி­டிக்­கப்­பட்­டது. அதை­யடுத்து இந்­தப் பொருள்­கள் மீட்டுக் கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இறக்­கு­ம­தி­யாகி இருக்­கும் அந்­தப் பொருள்­களை, முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக திரும்ப பெறும்­படி இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு சிங்­கப்­பூர் உணவு முகவை அமைப்பு உத்­த­ர­விட்­டுள்­ளது. இந்­தப் பணி நடந்து வரு­வ­தாக நேற்று தெரி­விக்­கப்­பட்­டது. படம்: சிங்­கப்­பூர் உணவு முகவை/ஃபேஸ்புக்