அகதிகளின் குழந்தைகளுக்கான சிகிச்சை பொம்மைகளை தமது பங்குதாரர் 'ஸ்டீவன் டி விண்ட்'டுடன் சேர்ந்து வடிவமைத்துள்ளார் அஷர்தீன் சுல்தான், 28. வடி
வமைப்புத் துறையில் பட்டக்கல்வி பயில நெதர்லாந்து சென்று, தனது இறுதி ஆண்டு பாடத்திட்டத்திற்காக அவர் இதைச் செய்தார்.
'ஸ்பெல்மென்டன்' என்று பெயரிடப்பட்ட இந்தப் படைப்பு, டச்சு வடிவமைப்பு வாரத்தின்போது தேர்ந்தெடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது. அத்துடன் 'ஐந்தோவன்' சமூக வடிவமைப்பு திறமை விருதுகளில் மூன்றாவது இடத்தை யும் இது பிடித்தது.
நெதர்லாந்தின் 'ஐந்தோவன்' வடிவமைப்புக் கல்விக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்த பின்னர் தற்போது பல்துறை வடிவமைப்பாளராகப் பணிபுரிறார் திரு அஷர்தீன்.
நெதர்லாந்தின் புகலிட மையங்களில் நாடிழந்து அகதிகளாக அடைக்கலம் பெற்றி ருக்கும் குழந்தைகளின் மனநிலை மோசமடைவதை உணர்ந்த அவர், அக்குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்தில் 'புராஜெக்ட் ஸ்பெல்மென்டன்' வடிவமைப்பைத் தொடங்கினர்.
"அகதி குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினோம். எனவே, உரையாடல்களுக்கான சிகிச்சை மண்டலங்களை அமைக்கப் பயன்படும் விளையாட்டுப் பொருள்களை வடிவமைக்கத் தொடங்கினோம்," என்று பகிர்ந்துகொண்டார் அஷர்தீன். குழந்தைகள் இந்தப் பொருள் களை பொம்மைகளாகப் பயன்
படுத்தும் அதே வேளையில் பெரியவர்களும் புகலிடத் தொண்டூழியர்களும் சிகிச்சைக்கான கருவி
களாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தயாரிப்பு வடிவமைப்பை கற்ற திரு அஷர்தீன், தமது ஆசிரியரின் பரிந்துரையைப் பின்பற்றி வடிவமைப்புத் திறனை மேலும் மேம்படுத்த ஐந்தோவன் வடிவமைப்பு கல்விக்கழகம் சென்றார்.
'ஸ்பெல்மென்டன்' என்னும் இவர் களது படைப்பு, மூன்று அங்கங்களைக் கொண்டது. முதல் அங்கத்தில், குழந்தைகள் ஒரு சிறிய கூடாரத்தை உருவாக்குகிறார்கள், இது 'சிந்தனையின் வீடு' என்று அழைக்கப்படுகிறது. இதன் மரவடி வமைப்புகள் குழந்தைகளின் கற்பனைத்திறனை வளர்க்க உதவுகிறது.
இரண்டாவது அம்சம் 'பாக்கியார்ட் கதைகள்' என்று அழைக்கப்படுகிறது. மற்றொரு குழந்தை அல்லது ஒரு தொண்டூழியருடன் ஒரு சீசாவைப் பகிர்ந்துகொள்ளவும் விளையாடும்போது உரையாடவும் இது அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதோடு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு தளத்தையும் அமைத்துக்கொடுக்கிறது.
மூன்றாவது அங்கம் 'ஸ்பாட்லைட்'. குழந்தைகள் மர நாற்காலி களைச் சேகரித்து, அவர்களில் ஒருவர் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் 'ஸ்பாட்லைட்'டில் இருப்பார்.
உரையாடல்களை எளிதாக்க ஒரு சிறந்த வழியாக அமைவதோடு, கட்டுமானம், குழுப்பணி போன்ற சமூகத் திறன்களைப் பற்றி அறியவும் நல்ல வாய்ப்பாக அமைகிறது 'ஸ்பெல்மென்டன்'.
"அகதிகளான குழந்தைகளின் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றும் வகையில் எங்கள் படைப்பு அமைந்திருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் குழந்தைகளுக்குச் சுதந்திரமாக விளையாட நேரமும் வளமும் இல்லை. 'ஸ்பெல்மென்டன்' இதைப் பூர்த்தி செய்கிறது," என்றார் அஷர்தீன்.

