உணவு மட்டுமின்றி ஒப்பனையும் சைவம்

உணவு மட்டுமின்றி ஒப்பனையும் சைவம்

3 mins read
1e064556-1a51-477d-aa73-739b44dac0ff
-

பூசைகளில் பயன்­ப­டுத்­தும் நெய்­யி­லி­ருந்து விருந்­தி­ல் படைக்கும் பால் பாய­சம்­வரை இந்து திரு­ம­ணங்­களின் பல அங்­கங்­களில் விலங்கு தொடர்பான பொருள்க­ளைப் பயன்­ப­டுத்­து­வது வழக்கமாக இருந்து வரு­கிறது.

இதிலிருந்து மாறுபட்டு 'வீக­னி­ஸம்' எனப்­படும் நனி (சுத்த) ­சைவ வாழ்க்­கை­முறையை ஐந்தாண்­டு

­க­ளுக்கு முன்னர் ­தேர்ந்தெடுத்தார் திரு­மதி மங்­க­ள­ரூ­பி­னி லட்­சு­

ம­ணன், 33. அசைவப் பொருள்கள் மட்­டு­மின்றி, விலங்குவதை சார்ந்த எந்தப் பொருளும் இல்­லாத விழா வாக தனது திரு­ம­ணம் நடைபெற வேண்டுமென விருப்­பப்­பட்­டார் இவர்.

உற்­றார் உற­வி­னர்­கள் எதிர்த்­து, ஏள­னம் செய்தாலும் ­திரு­மதி மங்­க­ள­ரூ­பி­னி­யின் எண்­ணத்­துக்கு ஆத­ர­வ­ளித்­தார் இவ­ரது திரு­மணத்தை நடத்­திய புரோ­கி­தர்.

நனி­ சைவ உண­வு, பருத்திப் (காட்டன்) புடவை ஆகியன இருந் தாலும் கோமாதா பூசைக்குத் தேவைப்­படும் பசும்­பா­லும் பசுநெய்­யும் இன்றி திரு­ம­ணத்தை நடத்த முடி­யாது என்று பலர் கூறி­யி­ருந்­த­னர். ஆனால், தனது வேண்டு­தலுக்கு இணங்கி, சோயா­ பால், கலப்­ப­ட­மில்­லாத தூய கற்­பூ­ரம், பூசை எண்­ணெய், டால்டா ஆகி­ய­வற்றைப் புரோகிதர் பயன்­ப­டுத்­தி­ ய­தாக இவர் கூறி­னார்.

புதுமணப்­பெண்­க­ளுக்கு பட்டு உடுத்­து­வதே உகந்­தது என்று பல­ரும் கூறக் கேட்­டி­ருந்­தார் திரு­மதி மங்­க­ள­ரூ­பினி. அதில் உடன்பா­டு இல்லாத இவர், பட்­டுப்புடவைபோலக் காட்­சி­ய­ளிக்­கும் பருத்திப் புடவை யையே திரு­ம­ணத்தில் அணிந்­தி­ருந்­தார். ஆடை­யில் மட்­டு­மின்றி, முக ஒப்­ப­னை­யி­லும்கூட விலங்கு வதை­யில்­லாத பொருள்கள் பயன்­

ப­டுத்­தப்­ப­டு­வதை உறுதிசெய்­தி­ருந்­தார் இந்தப் புரட்சிப் பெண்.

நனி­ சை­வத்தை எதிர்த்­தி­ருந்­தோ­ரும்­கூட, திரு­ம­ணத்­தன்று வழங்­கப்­பட்ட தேங்­காய்ப் ­பால் பாய­சத்தை சுவைத்தனர் என்­றார் திரு­மதி மங்­க­ள­ரூ­பினி.

"திரு­ம­ணத்தை முழுக்க முழுக்க 'வீகன்' முறை­யில் செய்­வதை பலர் ஆத­ரிக்­க­வில்லை என்­றா­லும் எனது கண­வர் கபி­லன் கைகொடுத்தார். இந்த நனி­ சைவ முறை­ நமது பண்­பாட்டை அவ­ம­திப்­ப­தாக எனக்குத் தோன்­ற­வில்லை.

"நமது மகிழ்ச்­சிக்­காக பிற உயிர்­களை வதைக்கலாம் என நமது பண்­பாடு சொல்லவில்லை. அத­னால், நம்­பிக்­கை­யுடனும் மனஉறுதி யுடனும் திருமண ஏற்­பா­டு­களை செய்தேன்," என்­றார் திரு­மதி மங்­க­ள­ரூ­பினி.

தேடித் தேடி, ஒவ்­வொரு பொரு­ளை­யும் நனி­ சை­வ­மென உறு­தி­செய்து­ எல்லா ஏற்­பா­டு­க­ளை­யும் செய்­வ­தற்கு அதிக செல­வா­கும் என தோன்­ற­லாம். ஆனால், தமது திரு­ம­ணம் 10,000 வெள்­ளிக்­குள் நடந்­தே­றி­ய­தாகப் பகிர்ந்­து­கொண்ட திரு­மதி மங்­க­ள­ரூ­பினி, நெய்­யும் பட்­டும் இல்­லா­தது பெரி­ய­ அள­வில் செல­வைக் குறைத்­த­தாகக் கூறி­னார்.

முதன்­மு­த­லில் நனி­ சைவ வாழ்க்கை­ மு­றைக்கு மாற எண்­ணிய இவருக்கு உணவுப் பழக்­கங்­களை மாற்­று­வதே முதல் படி­யாக இருந்­தது. படிப்­ப­டி­யாக ­சை­வ­மற்ற உணவு வகை­களை புறந்­தள்­ளிய இவ­ருக்கு, கடைசி சவா­லாக இருந்­தது பாலாடைக் கட்­டி­. அதையும் வென்ற இவர், கிட்­டத்­தட்ட விலங்கு சார்ந்த எல்லாப் பொருள்க­ளுக்­கும் தகுந்த மாற்றுத் தெரி­வு­கள் இருப்­பதை தெரிந்­து­கொண்­டார்.

நனி­ சைவமுறை­யி­லும் சுவை­யான பல­கா­ரங்­கள் செய்­ய­லாம் என்­பதை நிரூபிக்க, இவ்­வாண்டு, இணையச் சிற்­றுண்டி உணவகம் ஒன்றை பகு­தி­நே­ர­மாகத் தொடங்­கி­னார் திரு­மதி மங்­க­ள­ரூ­பினி. பல­வ­கை­யான கேக்­, ரொட்டி வகை­களை மாற்று உண­வுப்­பொ­ருள்க­ளு­டன் தயா­ரித்து விற்றுவரும் இவர், சமை­யல் பொருள்க­ளின் ­பின்ன ணியில் இருக்­கும் அறி­வி­ய­லைப் புரிந்து­கொண்­டாலே போதும், சுவை­யில் மாற்­ற­மின்றி அவற்றை நனி­ சை­வ­மாக மாற்­றி­வி­ட­லாம் என்­கி­றார்.

இவரது வாழ்க்­கை­மு­றை­யைக் கண்டு வியந்த இவரின் தாயார் திரு­மதி சரஸ்­வ­தியும் நான்கு ஆண்­டு

­க­ளாக நனி­ சை­வ­முறைக்கு மாறி­யுள்­ளார்.

நனி­ சைவ தமி­ழர் சாப்­பாட்டை விற்­கும் இணை­யக்­க­டை­ ஒன்றையும் திரு­மதி மங்­க­ள­ரூ­பினி இவ்­வாண்டு தொடங்­கி­யுள்­ளார்.

"ஒவ்­வொரு முடி­வின் பின்­ன­ணி­யி­லும் ஏதோ ஒரு வகை­யில் நாம் ஏதோ ஒரு ஜீவனை பாதிக்­கி­றோம் என்ற புரி­த­லைக் கொண்டுவரு­கிறது நனி ­சைவ வாழ்க்­கை­முறை. அர்த்­த­முள்ள விதத்­தில் வாழ்க்­கையை வழி­

ந­டத்­த இது உத­வி­யுள்­ளது," என்­றார் இந்தப் பெண்.