பெண்கள், குறிப்பாக இந்தியப் பெண்கள் காற்பந்து விளையாட்டில் அதிகம் இடம்பெறாததை மாற்ற நினைத்ததன் பயனாக விளைந்ததுதான், 'ஆயர் ராஜா கிரிஃபன்ஸ்' பெண்கள் காற்பந்து அணி. பல்கலைக்கழகப் பெண்கள் காற்பந்து அணிகளுக்கு பயிற்றுவிப்பாளராக பணியாற்றி வந்த காற்பந்து திரு ஜெஸ்பர் ரிச்சர்ட் தோமஸுக்கு இந்தியப் பெண்கள் திறமை இருந்தும் விளையாட முன்வராத நிலை வருத்தமளித்தது.
சிங்கப்பூர் ஆகாயப்படை, பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பயிற்றுவிப்பாளராக இருந்த அவர், தற்போது தேசிய பெண்கள் காற்பந்து 'ஏ' அணியின் துணை பயிற்றுவிப்பாளராக இருப் பதோடு, நண்பர்களுடன் சேர்ந்து ஆயர் ராஜா க்ரிஃபன்ஸ்' பெண்கள் காற்பந்து அணியைத் தொடங் கினார்.
இந்தியப் பெற்றோர் விதிக்கும் தடைகளாலும் பிரிந்த குடும்பங்கள், வேலை செய்யவேண்டிய கட்டாயம் முதலியவற்றாலும் ஆர் வமிருந்தும் பதின்ம வயதுப் பெண்கள் காற்பந்தில் இணையாமல் இருக்கின்றனர்.
அவர்களுக்கு பயிற்சியும் ஊக் கமும் தந்து, விளையாடுவதற்கான தளங்களை, வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முறன்றுவருவதாக திரு ஜெஸ்பர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு அணியில் சேர்ந்து, முன்னணி ஆட்டக்காரராக விளையாடும் அஷ்வினியும் தற்காப்பு ஆட்டக்காரராக விளையாடும் அக்ஷிதாவும் காற்பந்து விளையாட்டில் தீரா ஆர்வம் கொண்டவர்கள். நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மருத்துவத் தாதி படிப்பு பயிலும் இருவரும் அங்குள்ள காற்பந்து அணியிலும் விளையாடி வருகின்றனர்.
பொழுதுபோக்காக காற்பந்து விளையாடி வந்த அக்ஷிதாவுக்கு, முன்பிருந்த பள்ளிகளில் காற்பந்து இணைப்பாட நடவடிக்கையில் பெண்கள் அணி இல்லாததால், காற்பந்து விளையாடு
வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிட்டவில்லை. நீண்டகாலத்துக்குப் பிறகு பலதுறைத் தொழிற்கல்லூரியில் அந்த வாய்ப்பு கிட்டியதால், அடுக்குமாடிக் கட்டட கீழ்த்தளத்தில் விளையாடிக்கொண்டிருந்த அவர் திடலில் கால்பதித்தார்.
"பள்ளியில் கற்றுக்கொள்ள முடியாத சில முக்கிய காற்பந்து உத்திகளை இங்கு கற்றுக்கொள்ள முடிகின்றது. பெரிய வாய்ப்புகள் எளிதில் கிடைப்பதில்லை. அவற்றை இந்த அணி எனக்குத் தந்துள்ளது. என்மேல் எனக்கு நம்பிக்கையும் பிறந்துள்ளது," என்றார் 17 வயது மாணவியான அக்ஷிதா வெங்கடேஷ்.
பெண்களே பெண்களுக்கு உதவிக்கொள்ளும் ஆதரவானதொரு காற்பந்து சமூகத்தை அமைத்துக் கொடுத்திருக்கும் ஆயர் ராஜா பெண்கள் காற்பந்து அணியின் ஆதரவு தனக்கு கை கொடுத்துள்ளதாகக் கூறினார் மாணவி அஷ்வினி மெத்தியா. 17. சிறுவயதிலிருந்தே காற்பந்து விளையாடி வரும் இவர், பெண்கள் பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடும் கனவைக் கொண்டுள்ளார்.
அதற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்தது, கடந்த அக்டோபர் மாதம் ஆயர் ராஜா க்ரிஃபன்ஸ் அணி கலந்துகொண்ட பெண்கள் தேசிய லீக் போட்டிகள். ஆட்டத்தில் சமநிலை கண்டிருந்த அவர்களது அணி அயராது விளையாடியதாகவும் இந்த அனுபவம் தமக்கு மென்மேலும் நம்பிக்கை அளித்ததாகவும் பகிர்ந்துகொண்டார் அஷ்வினி.
2020ல் தொடங்கப்பட்ட ஆயர் ராஜா க்ரிஃபன்ஸ் பெண்கள் காற்பந்து அணி, கொவிட்-19 தடைகளால் பல போட்டிகளில் பங்கெடுக்க முடியவில்லை. எதிர் வரும் சிங்கா கிண்ணப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொண்டு சாதிக்கும் குறிக்கோள் கொண்டுள்ளது இந்த அணி.
செலவினங்களைச் சமாளிப்
பதில் இந்த அணி சவால்களைச் சந்தித்து வருவதாகக் கூறிய அணி உரிமையாளர் திரு செல்வகுமார் பன்னீர்செல்வம், ஆயர் ராஜா கிரிஃபன்ஸ் அணி எதிர்காலத்தில் நிபுணத்துவப் போட்டிகளுக்கான ஒப்பந்தம் பெறும் குறிக்கோள் கொண்டுள்ளதாகக் கூறினார்.
செய்தி: ஆ. விஷ்ணு வர்தினி

