ஆய்வு மேற்கல்விக்கு ஆதரவு தொடரும்

ஆய்வு மேற்கல்விக்கு ஆதரவு தொடரும்

1 mins read
382903d8-57a3-425c-89a4-b576fb535258
-

சிங்­கப்­பூ­ரில் ஆய்வு அடிப்­ப­டை­யிலான முது­நி­லைப் பட்­டக் கல்­வித் திட்­டங்­களில் பெரும்­பா­லா­ன­வற்­றுக்­குத் தொடர்ந்து மானி­யம் வழங்­கப்­படும் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

ஆய்­வுத் துறை­யில் மனி­த­வளத்தை உயர்த்­து­வது இதன் நோக்­கம். தன்­னாட்­சிப் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பெரும்­பா­லும் பட்ட மேற்­கல்­விக்கு அர­சாங்க நிதி­யு­தவி வழங்­கப்­ப­டு­வ­தில்லை என்று அது குறிப்­பிட்­டது.

பொது நிர்­வா­கம், பொதுச் சுகா­தா­ரம், கட்­ட­டக்­கலை போன்ற துறை­களில் முது­நி­லைக் கல்­விக்கு அமைச்சு நிதி­யா­த­ரவு வழங்­கக்­கூ­டும்.

சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கம் அதன் பட்ட மேற்­ப­டிப்­புக்­கான ஏட்­டுக் கல்­வித் திட்­டங்­களில் பெரும்­பா­லா­ன­வற்­றிற்கு 2024ஆம் ஆண்டு முதல் நிதி­யா­த­ரவு வழங்­கப்­ப­ட­மாட்­டாது என்று அறி­வித்­த­தை­ய­டுத்து ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சின் கேள்­விக்குக் கல்வி அமைச்சு பதி­ல­ளித்­தது.

ஏட்­டுக் கல்­வித் திட்­டங்­கள் ஆய்­வுக் கல்­வி­யில் இருந்து வேறு­பட்­டவை.

தன்­னாட்­சிப் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளி­ல் பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு வேலைக்­குத் தயா­ரா­கும் நோக்­கில் முதல் பட்­டக் கல்­விக்கு நிதி­யா­த­ரவு வழங்­கப்­படு­வதை அமைச்சு சுட்­டி­யது.

நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கான நிதி­யா­த­ரவு 2019ல் குறைக்­கப்­பட்­டது. அனைத்­து­லக மாண­வர்­க­ளுக்கு மானி­யம் ஏதும் கிடை­யாது என்­ப­தால் அவர்­கள் முழுக் கட்­ட­ணத்­தை­யும் செலுத்­து­வர்.