'ஷெல்' நிறுவனம் புலாவ் புக்கோமில் உள்ள அதன் வளாகத்தில் முதற்கட்டமாக ஏழு மின்சார வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியாக இந்நடவடிக்கை அமைகிறது. ஊழியர்கள் புலாவ் புக்கோம் படகுத் துறையில் இருந்து வளாகத்தில் உள்ள அலுவலகங்களுக்குச் செல்ல இவ்வாகனங்கள் உதவும்.
இவ்விடத்தில் தற்போது பயன்படுத்தப்படும் 200க்கு மேற்பட்ட கார்கள், பேருந்துகள் ஆகியவற்றுக்குப் பதிலாக அடுத்த மூவாண்டில் படிப்படியாக மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு வரும். அடுத்த ஆண்டு முதல் மூன்று மின்படகுகளும் சேவை வழங்கும் எனக் கூறப்பட்டது.

