உட்லண்ட்ஸ் வீட்டில் தீ விபத்து: 100 பேர் வெளியேற்றப்பட்டனர்

உட்லண்ட்ஸ் வீட்டில் தீ விபத்து: 100 பேர் வெளியேற்றப்பட்டனர்

1 mins read
92d1d2d1-67d4-472d-bbef-723fdc1486b2
-

உட்­லண்ட்ஸ் ஸ்தி­ரீட் 81ல் உள்ள புளோக் 806ல் இருக்­கும் வீடு ஒன்­றில் நேற்­று அதிகாலை தீ மூண்­டதை அடுத்து முன்­னெச்­சரிக்கை நட­வ­டிக்கையாக 100 பேர் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்டனர்.

புகை­யைச் சுவா­சித்­ததை அடுத்து இரு­வர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். மின் கசிவு கார­ண­மாக தீ மூண்­ட­தாக முதல் கட்ட விசா­ரணை மூலம் தெரிய வந்­துள்­ளது.

வீட்­டின் வர­வேற்பு அறை­யில் இருந்த தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னம் ஒன்­றுதான் தீ மூண்­ட­தற்­குக் கார­ணம் என்று நம்­பப்­ப­டு­கிறது.

இந்­தச் சம்­ப­வத்­துக்கு 11 நாள்­களுக்கு முன்­ன­தாக, டிசம்­பர் 8 ஆம் தேதி, ஹெண்­டர்­சன் ரோட்­டில் இருக்­கும் ஈரறை வீடு ஒன்­றில் தீ மூண்­டது. அதற்கும் மின் கசி­வே கார­ண­மாக இருக்­கும் என்று கரு­தப்­பட்­டது.

அந்­தச் சம்­ப­வத்­தில் தீயை அணைத்­துக்­கொண்டு இருந்­த­முத­லாம் சார்­ஜண்ட் எட்­வர்ட் எச். கோ மர­ண­ம­டைந்­தார்.

இத­னி­டையே, நேற்­றைய தீ விபத்து பற்றி தக­வல் தெரி­வித்த சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப்­படை, மின்கலன்களை அள­வுக்கு அதிக நேரம் அல்­லது இரவு முழு­வ­தும் மின் இணைப்­பி­லேயே இணைத்து வைக்­கா­தீர்­கள் என்று குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு அறி­வுரை கூறி­யது. அதே­போல் நம்­பத்­த­குந்த மின்கலன்களை வாங்­கும்­ப­டி­யும் அது ஆலோ­சனை கூறி­யது.

சிங்­கப்­பூ­ரில் 2021ஆம் ஆண்டில் தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னம் தொடர்­பான 32 தீச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன. மின்­சார சைக்­கிள்­கள் சம்­பந்­தப்­பட்ட 23 தீ விபத்­து­கள் நிகழ்ந்­தன.