சமய அறப்பணி அமைப்புகளுக்குக் கொடைகள் குறைந்தன

சமய அறப்பணி அமைப்புகளுக்குக் கொடைகள் குறைந்தன

1 mins read
e0b4c57e-18d7-4e45-9060-a4b18822017f
-

தேவா­ல­யங்­கள், கோயில்­கள் போன்ற சமய அறப்­பணி அமைப்பு­கள், பல்­க­லைக்­க­ழ­கங்­கள் போன்ற கல்வித் துறை அமைப்பு­கள் ஆகி­ய­வற்­றுக்­குக் கிடைத்த நன்­கொ­டை­கள் 2020ஆம் ஆண்டில் குறைந்துள்ளன.

சம­யக் குழு­மங்­க­ளுக்­கான நன்­கொ­டை­கள் 2019வது நிதி ஆண்­டில் $1.34 பில்­லி­ய­னாக இருந்­தன. இவை அடுத்த ஆண்டில் 13% குறைந்து $1.17 பில்­லி­ய­னாக இறங்கின.

அதே­வே­ளை­யில், கல்வி நிறு­வனங்­க­ளுக்­கான நன்­கொ­டை­கள் அதே கால­கட்­டத்­தில் $483.7 மில்­லி­ய­னில் இருந்து 13% குறைந்து $418.5 மில்­லி­ய­னாக இருந்­தன.

சமூக, நல்­வாழ்வு, சுகா­தா­ரம், சமு­தா­யம் போன்ற இதர துறை­களைப் பொறுத்­த­வரை நன்­கொடை­கள் 2020வது நிதி ஆண்டில் கூடின. என்­றா­லும்­கூட 2020 நிதி ஆண்­டில் எல்லா அறப்பணி அமைப்­பு­க­ளுக்­கும் கிடைத்த $3.12 பில்­லி­யன் நன்­கொ­டை­களில் 37% சமய அறப்­பணி அமைப்­பு­க­ளுக்­கே சென்­றன.

இந்த விவ­ரங்­கள் அறப்­பணி அமைப்­பு­கள் ஆணை­யர் நவம்­பர் மாத முடி­வில் வெளி­யிட்ட 2021 வரு­டாந்­திர அறிக்­கை­யிலுள்ளன.