மேம்பாட்டுப் பணிக்கு முன்னதாக சுற்றுச்சூழல் ஆய்வு

மேம்பாட்டுப் பணிக்கு முன்னதாக சுற்றுச்சூழல் ஆய்வு

1 mins read
df92d20f-263a-4011-a230-82807c0e11e8
-

ஜாலான் பகா­ரில் உள்ள ஒரு காட்டுப்பகுதி, தொழில்துறை பயனீட்­டுக்­காக மேம்பட உள்­ளது. இருந்­தா­லும் அந்த மேம்­பா­டு­களுக்கு முன்­ன­தாக சுற்­றுச்­சூ­ழல் ஆய்வு ஒன்று நடத்­தப்­படும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அந்த 40 ஹெக்­டர் காட்­டுப் பகுதி, ஜூரோங் புத்­தாக்க மாவட்­டத்­தின் பகார் வட்­டா­ர­மாக உரு வெடுக்­கும்.

ஜூரோங் புத்­தாக்க மாவட்­டம் என்­பது ஐந்து வட்­டா­ரங்­களை உள்­ள­டக்­கிய 600 ஹெக்­டர் பரப்­பளவு உள்ள அதிநவீன தொழில்­துறை மாவட்டமாக இருக்­கும்.

ஜாலான் பகா­ரில் உள்ள காட்டு­வள இடம் வன­வி­லங்கு உயிரினங்­க­ளுக்­குப் புக­லி­ட­மாக இருப்­ப­தால் சுற்­றுப்­புற ஆர்­வ­லர்­கள் கவலை தெரி­வித்து இருக்­கி­றார்­கள்.

அந்­தப் பகு­தி­யில் இடம்­பெ­றக்­கூ­டிய மேம்­பாட்­டுத் திட்­டங்­க­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய சுற்­றுச்­சூ­ழல் தாக்­கத்தை மதிப்­பி­டு­வ­தற்­கான ஆய்வு 2023ல் தொடங்­கும் என்று ஜூரோங் நக­ராண்­மைக் கழ­கத்­தின் இயக்­கு­நர் திரு­வாட்டி ஃபின் டே தெரி­வித்­தார்.

கழ­கம் கூடு­மா­ன­வரை பசுமை வளத்­தை­யும் உயி­ரி­யல் பன்­ம­யத்தை­யும் கட்­டிக்­காக்க விரும்­பு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.