தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூருக்கு திரும்பும்போது கொண்டுவரக்கூடிய, எடுத்துவரக் கூடாத பொருள்கள் விவரங்கள்

3 mins read
d3413055-c749-4698-9913-207f93de1627
-

வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்­று­விட்டு சிங்­கப்­பூர் திரும்­பு­கை­யில் மின்­சிகரெட், சுவிங்­கம் ஆகி­ய­வற்­றைக் கொண்­டு­வ­ரக் கூடாது என்­பது தெரிந்­த­வை­தான்.

அதே­போல, சிங்­கப்­பூர் திரும்பு­வோர் எந்த அள­வுக்கு எவை எவற்றை கொண்டு வர­லாம், எவை எவற்றை கொண்­டு­வர முடியாது என்­ப­வற்­றைத் தெரிந்­து­வைத்­துக் கொள்­வது நல்­லது.

நீங்­கள் மலே­சியா தவிர இதர நாடு­களில் 48 மணி நேரத்­திற்கு மேல் தங்­கி­விட்டு திரும்­பி­னால், தீர்வை செலுத்­தா­மல் பீர், ஒயின், விஸ்கி, பிராந்தி போன்ற 2 லிட்­டர் மது­பா­னத்தை எடுத்து வர­லாம்.

மேல் விவ­ரங்­களை str.sg/wCFP என்ற முக­வ­ரி­யில் தெரிந்­து­கொள்­ள­லாம். Customs@SG Web என்ற செய­லி­யில் ஏற்­கெ­னவே பணத்தைச் செலுத்­தி­விட்டு 10 லிட்­டர் மது­பானத்­தை­யும் எடுத்து வர­லாம். 14% ஆல்­க­ஹால் கலந்து இருக்­கும் ஒரு லிட்­டர் ஒயின் போத்­தலை எடுத்­து­வர நீங்­கள் $12.32 தீர்­வைச் செலுத்த வேண்டி இருக்­கும்.மேல் விவ­ரங்­க­ளுக்கு str.sg/wCFm இந்த முக­வ­ரியை அணு­கலாம்.

அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நாடு­களில் இருந்து வரும்­போது ஒவ்­வொ­ரு­வரும் 5 கிலோ இறைச்சி பொருள்­களைக் கொண்­டு­வர முடி­யும். இதில் சமைத்த இறைச்­சி­யும் அடங்கும். மேல் விவரங்­களை str.sg/wCFs என்ற முக­வ­ரி­யில் தெரிந்து­கொள்­ள­லாம்.

மலே­சியா, தாய்­லாந்து, இந்­தோ­னீ­சியா போன்ற நாடு­களில் இருந்து சுட்ட இனிப்பு இறைச்­சியை எடுத்து வர­மு­டி­யாது. உயி­ரோடு அல்­லது குளி­ரூட்­டப்­பட்ட சிப்­பி­களை, அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எட்டு நாடு­களில் ஏதா­வது ஒன்­றிலிருந்து மட்­டும்­தான் நீங்­கள் கொண்­டு­வர முடி­யும். மொத்­தம் 5 கிலோ கடல் உணவுப் பொருள்­க­ளைக் கொண்டு வர­லாம்.

அதில் சமைத்த நண்டு இறைச்சி, குளி­ரூட்­டப்­பட்ட சமைத்த இறால் இறைச்சி கூடி­ன­பட்­சம் 2 கிலோ வரை­தான் இருக்க முடி­யும்.

இவற்றை எந்த நாட்­டில் இருந்து வேண்­டு­மா­னா­லும் கொண்டு வர­லாம். விவ­ரங்­க­ளுக்கு str.sg/wCFs முக­வ­ரியை நாட­வும். ஒரு­வர் 30 கோழி முட்­டை­களை மேற்கு மலேசியா உள்­ளிட்ட பல இடங்­களில் இருந்தும் எடுத்து வரலாம். (str.sg/wCFs).

பழம், காய்­க­றி­க­ளைப் பொறுத்­த­வரை சிங்­கப்­பூர் உணவு முகவை அங்­கீ­க­ரிக்­கும் அள­வுக்கு கையில் எடுத்­து­வ­ரக்­கூ­டிய ஒரு பை அல்லது பெட்டி அள­வுக்கு எந்த நாட்­டில் இருந்து வேண்­டு­மா­னா­லும் கொண்டு வர­லாம்.

பாலாடை, தின்­பண்­டங்­கள், பால்­மாவு எல்­லாம் பதப்­ப­டுத்­தப்­பட்ட உணவு வகை­களில் உள்­ள­டங்­கும். கூடி­ன­பட்­ச­மாக 5 கிலோ அல்­லது 5 லிட்­டர் எடுத்து வர­லாம். ஆனால் அவற்­றின் மதிப்பு $100ஐ தாண்­டக்­கூ­டாது. பேர்ட்ஸ் நெஸ்ட் ஊட்­டச்­சத்து (bird's nest) ஒரு கிலோ கொண்டு வர­லாம்.

நீங்­கள் 48 மணி நேரம் அல்­லது அதற்கு மேலாக வெளி­நா­டு­களில் தங்கி இருந்­து­விட்டு வந்­தால், உங்­க­ளுக்கு $500 ஜிஎஸ்டி நிவா­ரண வரம்பு உண்டு. 48 மணி நேரம் அல்­லது அதற்­குக் குறை­வாக தங்­கி­யி­ருந்­து­விட்டு வந்­தால் இந்த நிவா­ர­ணம் $100. இந்த மதிப்­பிற்கு மேலாக கொண்டு வரும் பொருள்­க­ளுக்கு ஜிஎஸ்டி வரி­யைச் செலுத்த வேண்டி இருக்­கும்.

இரண்டு வார காலம் வெளி­நாடு சென்­றுவிட்டு திரும்­பும்­போது $15,000 மதிப்­புள்ள கைப்­பை­யு­டன் வரு­கி­றீர்­கள் என்­றால், நீங்­கள் $14,500 தொகைக்கு 7% ஜிஎஸ்டி வரி­யைச் செலுத்த வேண்டி இருக்­கும். இந்த வரி வரும் ஜன­வரி 1 முதல் 8% ஆகிறது.

வெளி­நாட்­டில் அந்­தப் பையை வாங்­கியபோது விற்­பனை வரி­யைச் செலுத்தி இருந்­தா­லும் இங்கு அதை எடுத்து வரும்­போது ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்­டும்.

பய­ணம் தொடர்­பி­லான மேல் தக­வல்­கள் விவ­ரங்­க­ளைப் பெற str.sg/travel முக­வ­ரி உதவும்.