‘ஜிசிஇ’ வழக்கநிலைத் தேர்வு முடிவுகள்: சவால்களை வென்று சாதித்த மாணவர்கள்

ரச்­சனா வேலா­யு­தம்

மோன­லிசா

இவ்­வாண்டு பொதுக் கல்­விச் சான்­றி­தழ் வழக்­க­நி­லைத் (ஜிசிஇ ‘என்’ நிலை) தேர்வு எழு­திய 9,000 வழக்­க­நிலை ஏட்­டுக்­கல்வி பிரிவு மாண­வர்­களில் 99.5 விழுக்­காட்­டி­ன­ரும் 4,414 வழக்­க­நிலை தொழில்­நுட்­பப் பிரிவு மாண­வர்­களில் 98 விழுக்­காட்­டி­ன­ரும் தேர்ச்சி பெற்­றுள்­ள­னர்.

இதில் வழக்­க­நிலை ஏட்­டுக்­கல்வி பிரி­வி­லி­ருந்து 78.4 விழுக்­காட்டு மாண­வர்­கள் உயர்­நிலை ஐந்­திற்குச் செல்ல தகுதி பெற்­றுள்­ள­னர். இதே பிரி­வி­லி­ருந்து 51.9 விழுக்­காட்டு மாண­வர்­கள் குறிப்­பிட்ட பாடங்­க­ளுக்கு பொதுக் கல்­விச் சான்­றி­தழ் சாதா­ர­ண நி­லைத் (ஜிசிஇ ‘ஓ’ நிலை) தேர்வு எழு­தி­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தேர்ச்சி பெற்­ற­வர்­களில், சமூக அக்­கறை கொண்ட 16 வயது ஸ்ரீநிதா ஏஞ்­ச­லும் ஒரு­வர். சிராங்கூன் உயர்நிலைப் பள்ளி மாணவியான ஸ்ரீநிதா இதற்கு முன், தமி­ழில் தேர்ச்சி பெற சிர­மப்­பட்­டார். விடா­மு­யற்­சி­யா­லும் கடின உழைப்­பா­லும் இத்­தேர்­வில் தமி­ழில் சிறப்­பாக செய்­துள்­ள­தாக ஸ்ரீநிதா கூறி­னார்.

சமூ­கத்­தில் உள்ள முதி­யோ­ருக்­கும் மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்­கும் உதவ விரும்­பும் ஸ்ரீநிதா சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தில் இளை­யர் தொண்­டூ­ழி­ய­ராக இருந்­துள்­ளார். தமது சேவை­க­ளுக்­கா­க­வும் தலை­மைத்­து­வம், நற்­பண்பு ஆகி­ய­வற்­றுக்­கா­க­வும் பல விரு­து­க­ளைப் பெற்­றுள்­ளார். பள்­ளி­யில் சட்­டாம்­பிள்­ளை­யாக இருந்த இவர், வழக்­க­நிலை தொழில்­நுட்­பப் பிரி­வில் இருப்­பதை ஒரு தடை­யா­கக் கரு­தா­மல் தமது குறிக்­கோள்­களை நோக்கி தொடர்ந்து பய­ணித்­தார்.

மருத்­து­வத் துறை­யில் நோயாளி சேவைப் பிரிவு நிர்­வா­கி­யான தம்முடைய தாயின் பணி ஸ்ரீநிதாவை ஈர்த்தது. வருங்­கா­லத்­தில் தாதி­யா­கப் பணி­யாற்ற முடிவு செய்தார். அவர் நினைத்­தது போலவே தேர்வு முடி­வு­க­ளுக்கு முன்­பா­கவே தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் தாதிமை படிப்­புக்கு தகு­தி­யும் பெற்­றுள்ளார்.

அடுத்த மாதம் தாதிமை படிப்பை மேற்­கொள்­ள­வி­ருக்­கும் இவர், தம்முடைய தாத்தா, பாட்­டியை கவனித்துக்­கொள்­வது மிகுந்த மகிழ்ச்சி அளிப்­ப­தாக கூறி­னார்.

கல்வி, குடும்­பம், பள்­ளிப் பொறுப்­பு­ க­ளைச் சமா­ளிக்க சிர­மப்­ப­ட்டபோது மன­ உ­ளைச்­சலை ஆற்றும் மருந்தாக அவருக்கு இருந்தது பியானோ இசைக் கருவி.

இசை மீதான ஆர்­வத்­தி­னால், சுய­மாக பியா­னோவை ஸ்ரீநிதா கற்­றுக்­கொண்­டார்.

ஒற்றை தாயார் வளர்ப்­பில் வளர்ந்த இம்­டி­யாஸ் அஹ­மத், ஆரம்­பத்­தில் கல்­வி­யில் அதிக ஈடு­பாடு இல்­லா­மல் தடு­மா­றி­னார். குவீன்ஸ்­ட­வுன் உயர்­நி­லைப்­பள்ளியைச் சேர்ந்த இம்­டி­யாஸ், தமது நண்­பர்­கள், ஆசி­ரி­யர்­கள், குடும்­பத்­தி­னர் ஆகி­யோ­ரின் ஊக்­கு­விப்­பால் மெல்ல கல்­வி­யின்­மீது ஆர்­வத்தை வளர்த்­துக்­கொண்­டார்.

குடும்ப சூழ்­நி­லை­யை­யும் தாண்டி ஜிசிஇ வழக்­க­நி­லைத் தேர்­வில் இன்று இம்­டி­யாஸ் சிறப்­பாக தேர்ச்சி பெற்­றி­ருக்­கி­றார். தொண்­டூ­ழி­யப் பணி­க­ளுக்­காக விரு­து­க­ளைப் பெற்ற இவர் இணை­யப்­பா­து­காப்பு நிபு­ண­ராக ஆக வேண்­டும் என்ற கன­வோடு இருக்­கி­றார்.

பரு­ம­னான உட­லா­லும் தொடக்­கப் பள்ளி இறுதி ஆண்­டுத் தேர்­வில் வழக்­க­நி­லை­யில் தேர்ச்சி பெற்­ற­தா­லும் உயர்­நி­லைப் பள்­ளி­யில் சேர்ந்­த­போது தன்­னம்­பிக்­கையை இழந்­தார் திலோத்­தமா டூலி போஸ்.

ஆனால் அதுவே தமது வளர்ச்­சிக்­குத் தடை­யா­ன­போது தமது மனத்­ தடை­களை தூக்கி எறிந்­து­விட்டு கல்­வி­யில் அக்­கறை காட்­டத் தொடங்­கி­னார் திலோத்­தமா. அதற்­குப் பல­னா­கக் கிடைத்­தது நல்ல தேர்ச்சி. மெரி­டி­யன் உயர்­நி­லைப்­பள்ளி மாண­வி­யான இவர், அடுத்­த­வ­ரு­டன் தம்மை ஒப்­பிட்­டுப் பார்த்­தல் தேவை­யற்­றது என்பதை உணர்ந்­துள்­ளார்.

குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் குடும்­பத்­தைச் ேசர்ந்த 16 வய­தான மகேஸ்­வ­ரன் ராஜேஷ்­பாபு விடு­முறை நாள்­களில் பகு­தி­நே­ர­மாக விரைவு உண­வ­கங்­களில் பணி­பு­ரி­வார்.

குடும்பப் பொரு­ளா­தார சூழ்­நி­லையை உணர்ந்து பொறுப்­பு­டன் நடந்­து­கொள்­ளும் இவர், இவ்­வாண்­டின் பொதுக் கல்­விச் சான்­றி­தழ் வழக்­க­நி­லைத் தேர்­வில் சிறப்புத் தேர்ச்சி பெற்­றுள்­ளார்.

சிராங்­கூன் கார்­டன் உயர்­நி­லைப்­பள்ளி மாண­வ­ரான இவர், இப்­பள்­ளி­யில் சேர்ந்­த­போது தன்­னம்­பிக்­கை­யில்­லா­ம­லும் மிகுந்த கூச்ச சுபா­வம் உடைய மாண­வ­ரா­க­வும் இருந்­ததாகக் கூறினார்.

ஆசி­ரி­யர்­களும் நண்­பர்­களும் குடும்­ப­மும் அளித்த ஊக்­கத்­தில் பல்­வேறு தலை­மைத்­துவ நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டார் மகேஸ்வரன்.

தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் பேக்­கிங் துறையில் சேர்ந்து மகேஸ்வரன் படிக்கவுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!