மத்திய வர்த்தக வட்டாரத்தில் பயண எண்ணிக்கை குறைவு

மத்திய வர்த்தக வட்டாரத்தில் பயண எண்ணிக்கை குறைவு

2 mins read
3d3337f0-436e-4b65-af9a-58526ec5ce8d
-

மத்­திய வர்த்­தக வட்­டா­ரத்தை நோக்கி எம்­ஆர்டி ரயில்களில் பய­ணம் செய்தோரின் எண்­ணிக்கை இவ்­வாண்டு ஜன­வரி முதல் அக்­டோ­பர் வரை வார நாள்­க­ளின் காலை உச்­ச­நே­ரத்­தில் குறை­வா­கவே பதி­வா­னது.

நீடிக்­கும் நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பா­டு­கள் கார­ண­மாக போக்­கு­வ­ரத்து முறை மாற்­றம் கண்­டி­ருப்­ப­தால், கொவிட்-19 கொள்ளை ­ நோய்க்கு முன்­பி­ருந்­த­தில் பாதி அள­வையே இது எட்டி உள்­ள­தாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

அத்­து­டன், காலை மற்­றும் மாலை உச்­ச­நே­ரங்­களில் பொதுப் போக்­கு­வ­ரத்­தைப் பயன்­ப­டுத்­தி­யோ­ரின் எண்­ணிக்­கை­யும் குறைவு என்று பய­ணச்­சீட்டு தர­வு­கள் தெரி­வித்­துள்­ளன.

கொள்­ளை­நோய்க்கு முந்­திய 2019 அக்­டோ­ப­ரு­டன் இந்த ஆண்­டின் அக்­டோ­பரை ஒப்­பி­டும்­போது பேருந்து, ரயில்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட ஒட்­டு­மொத்­தப் பய­ணங்­க­ளின் எண்­ணிக்கை குறை­வாக இருந்­தது.

இந்த ஆண்­டின் முதல் பத்து மாதங்­களில் ஒவ்­வொரு வார­நாள்­

க­ளி­லும் காலை உச்­ச­நே­ரத்­தில் ரயில்­க­ளி­லும் பேருந்­து­க­ளி­லும் சரா­ ச­ரி­யாக 1.22 மில்­லி­யன் பேர் பய­ணம் செய்­த­னர். மூன்­றாண்­டு

­க­ளுக்கு முன்­னர் இருந்த அள­வில் இந்த எண்­ணிக்கை 77.8 விழுக்­காடு ஆகும். 2019ஆம் ஆண்­டில் இதே பத்து மாதங்­களில் காலை உச்­ச­நே­ரத்­தின்­போது நாள் ஒன்­றுக்­குச் சரா­ச­ரி­யாக 1.57 மில்­லி­யன் பேர் பய­ணம் செய்­த­னர்.

இருப்­பி­னும், வார­யி­றுதி நாள்­

க­ளை­யும் சேர்த்­துக் கணக்­கி­டு­கை­யில் ஒவ்­வொரு நாளும் காலை முதல் இரவு வரை பய­ணம் செய்­தோ­ரின் எண்­ணிக்­கை­யில் சிறிய மீட்சி பதி­வா­னது.

இந்த ஆண்­டின் ஜன­வரி முதல் அக்­டோ­பர் வரை­யில் வாரத்­தின் ஏழு நாள்­க­ளி­லும் நாள் ஒன்­றுக்­குச் சரா­ச­ரி­யாக 6.31 மில்­லி­யன் பேர் பொதுப் போக்­கு­வ­ரத்­தைப் பயன்­ப­டுத்­தி­னர். இது கொள்­ளை­நோய்க்கு முந்­திய காலத்­தின் எண்­ணிக்­கை­யில் 81.5 விழுக்­காடு.

இந்த ஆண்­டின் ஏப்­ரல் மாதம் கொவிட்-19 கொள்­ளை­நோய் கட்­டுப்­பா­டு­கள் பெரிய அள­வில் தளர்த்­தப்­பட்­ட­தன் விளை­வாக ஒட்­டு­மொத்­தப் பயண எண்­ணிக்­கை­யில் முன்­னேற்­றம் காணப்­பட்­டது.

குறிப்­பாக சமூக ஒன்­று­கூ­டல்­

க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­கள் நீக்­கப்­பட்­ட­தும் ஏரா­ள­மா­னோர் வேலை­யி­டங்­க­ளுக்­குத் திரும்ப அனு­ம­திக்­கப்­பட்­ட­தும் பயண எண்­ணிக்கை அதி­க­ரிப்­புக்கு உத­வின.

பய­ணம் தொடர்­பான விவ­ரங்­கள் அடங்­கிய தர­வு­களை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளுக்கு நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் வழங்­கி­யது.

அதில் இடம்­பெற்ற தக­வல்­கள் நவம்­பர் மாதம் சிங்­கப்­பூர் அனைத்­து­லக போக்­கு­வ­ரத்து மாநாடு மற்­றும் கண்­காட்­சி­யின் குழு விவா­தத்­தின்­போது ஆணை­யத்­தின் உள்­கட்­ட­மைப்பு, மேம்­பாட்­டுக்­கான துணைத் தலைமை நிர்­வாகி திரு சுவா சோங் கெங் தெரி­வித்­த­தோடு ஒத்து இருந்­தன.

மத்­திய வர்த்­தக வட்­டா­ரத்­திற்கு உள்­புற, வெளிப்­புற வட்­டா­ரங்­க­ளுக்கு இடை­யில் பொதுப் போக்கு­ வ­ரத்­தில் மேற்­கொள்­ளப்­படும் பய­ணங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­பைக் கண்­ட­தாக அப்­போது அவர் கூறி­யி­ருந்­தார்.

இதே குழு விவா­தத்­தில் பங்­கேற்ற இதர நாடு­க­ளின் பொதுப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த நிர்­வா­கி­களும் தங்­க­ளது நாட்­டின் பயண முறை கொவிட்-19 கார­ண­மா­க­வும் நீக்­குப்­போக்­கான வேலை­முறை கார­ண­மா­க­வும் மாற்­றம் கண்­டி­ருப்­ப­தா­கக் கூறி­னர்.

காலை உச்சநேரப் பயணம் கொள்ளைநோய்க்கு முந்திய நிலையை இன்னும் எட்டவில்லை