மக்கள் நலனில் அக்கறை காட்டுவோரை சிறப்பிக்கும் சிங்கப்பூர் அறநிறுவனம்

மக்கள் நலனில் அக்கறை காட்டுவோரை சிறப்பிக்கும் சிங்கப்பூர் அறநிறுவனம்

2 mins read
3b5f9af3-bed7-4794-b4d5-d4406d45fdd2
-

சிங்­கப்­பூர் அனைத்­து­லக அற­

நி­று­வ­னம் கடந்த 10 ஆண்­டு

­க­ளாக 'அவர் பெட்­டர் வோர்ல்ட்' (ஓ.பி.டபிள்யூ.) என்ற அமைப்பை நடத்தி வரு­கிறது.

ஆசியா முழு­வ­தும் மக்­கள் நலத்­துக்­காக போரா­டும் தனி நபர்­களை இந்­நி­று­வ­னம் முன்­னி­லைப்­ப­டுத்தி காணொ­ளி­களை வெளி­யிட்­டுள்­ளது.

'கனவு கிரா­மம்: இந்­தி­யா­வின் முன்­னாள் பாலி­யல் தொழி­லா­ளர் களின் அடைக்­க­லம்' என்ற தலைப்­பில் காணொளி ஒன்றை ஓ.பி.டபிள்யூ. இந்த ஆண்டு வெளி­யிட்­டது.

இது, கதை சொல்­லும் பிரி­வில் சிறந்த காணொ­ளிக்­கான விருதை பெற்­றது.

டெல்­லி­யில், கட்­டா­யப்­ப­டுத்தி பாலி­யல் தொழி­லில் ஈடு­ப­டுத்­தப்­பட்ட பெண்­க­ளின் கவ­லைக்­கு­ரிய நிலை யை எடுத்­துச்­சொல்­வது இந்த காணொ­ளி­யின் நோக்­க­மாக இருந்­தது.

பாலி­யல் தொழி­லில் இதற்கு முன்­னர் ஈடு­பட்ட பெண்­கள் ஆத­ரிக்­கப்­ப­டு­வ­தை­யும் கட்-கதா என்ற லாப நோக்­கமற்ற அமைப்பு இந்­தப் பெண்­களை ஆத­ரிப்­ப­தை­யும் இந்­தக் காணொளி காட்­டி­யது.

சுய­ம­ரி­யா­தை­யு­டன் வாழ, இவர்

களுக்­குக் கல்வி, பல்­வேறு திறன்­கள் ஆகி­ய­வற்றை வழங்­கு­வ­தோடு அவர்­க­ளின் குழந்­தை­களை வளர்க்கவும் இந்த அமைப்பு உத­வி­யுள்­ளது.

ஓ.பி.டபிள்யூ. இது­வரை ஒன்­பது ஆசிய நாடு­க­ளி­லி­ருந்து 350 கதை­க­ளைச் சொல்ல காணொ­ளி­களை வெளி­யிட்­டது. இதில், 400க்கும் மேற்­பட்­ட­வர்­கள் இந்­தக் கதை­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­னர்.

விலங்­கு­க­ளின் நலம், கலை, கலா­சா­ரம், இளை­யர், சிறார், கல்வி, பன்­மு­கத்­தன்மை, முதி­யோர், சுற்­றுச்­சூ­ழல், சுகா­தா­ரம், பெண்­கள் தொடர்­பான பல்­வேறு உல­க­ளா­விய பிரச்­சி­னை­களை இந்த காணொ­ளி­கள் வெளிச்­சத்­திற்­குக் கொண்­டு­வ­ரு­கின்­றன.

கடந்த 10 ஆண்­டு­களில், இக்­கா­ணொ­ளி­கள் 229 மில்­லி­ய­னுக்­கும் மேலான பார்­வை­க­ளைப் பெற்­றுள்­ளன. இதில், உல­கப் பிரச்­சி­னை­களை பல சமூக நிகழ்ச்­சி­கள் மூலம், பொது­மக்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டும் முயற்­சி­களில் இத்­திட் டம் ஈடு­ப­டு­கிறது.

இத்­து­டன், 'மன­ந­லத்­திற்­குக் குரல் கொடுப்­போம்' என்ற தலைப்­பில், உயிரை மாய்த்­துக்­கொள்­ளும் பிரச்­சி­னை­களை எடுத்­துச் சொல்­லும் மூன்று காணொ­ளி­களை யும் ஓ.பி.டபிள்யூ. வெளி­யிட்­டது.

தங்­க­ளின் உயிரை மாய்த்­துக்­கொள்ள வேண்­டும் என்ற எண்­ணங்­க­ளு­டன் தினந்­தோ­றும் போரா­டு­ப­வர்­க­ளின் கதை­களை இந்­தக் காணொ­ளி­களில் பார்க்­க­லாம்.

'லிவிங் வித் சூ­ஸைட்' (Living with suicide), 'இம்­பர்ட்­டிங் எ லைஃப் ஒர்த் லிவிங்' (Impart-ing a Life worth Living) , 'டு தோஸ் ஹு ஹேவ் லாஸ்ட் எ லவ்ட் ஒன் டு சூஸைட்' (To Those Who Have Lost a Loved One to Suicide) என்ற மூன்று காணொ­ளி­கள் மன­நலப் பிரி­வில் வெள்ளி விருதைப் பெற்­றன.

உயிரை மாய்த்­துக்­கொள்­ளும் எண்­ணம் கொண்­ட­வர்­கள் எங்கு உத­வி­பெ­ற­லாம் என்ற விவ­ரங்­

க­ளை­யும் இந்­தக் காணொ­ளி­கள் பகிர்ந்­து­கொண்­டன. இது­வரை இக்­கா­ணொ­ளி­கள் 3.2 மில்­லி­யன் பார்­வை­க­ளைப் பெற்­றுள்­ளன.

ஓ.பி.டபிள்யூ. இணை­யத்­த­ளம் 778,000 நபர்­க­ளைக் கொண்ட அமைப்­பாக செயல்­ப­டு­கிறது.

சமூகக் கதை­களை உருக வைக்­கும் வகை­யில் சொல்­லும் இந்த அமைப்பு பல விரு­து­களை தொடர்ந்து பெறு­கிறது. ஓ.பி.டபிள்யூ. அமைப்­பின் முயற்­சி­

க­ளால், இந்த சமூ­கப் பிரச்­சி­னை­

க­ளைக் கையா­ளும் சமூக அமைப்­பு­க­ளுக்கு நல்ல வர­வேற்­பும் ஆத­ர­வும் கிடைத்­துள்­ளன.